Kathir News
Begin typing your search above and press return to search.

கட்சியில் உறுப்பினராக இல்லாத சசிகலா அ.தி.மு.க. பற்றி பேசுவது சரியில்லை: கடம்பூர் ராஜூ.!

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா அதிமுக பற்றி பேசுவது சரியில்லை என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கட்சியில் உறுப்பினராக இல்லாத சசிகலா அ.தி.மு.க. பற்றி பேசுவது சரியில்லை: கடம்பூர் ராஜூ.!
X

ThangaveluBy : Thangavelu

  |  16 Jun 2021 6:08 PM IST

அதிமுகவில் அடிப்படை உறுப்பினராக இல்லாத சசிகலா அதிமுக பற்றி பேசுவது சரியில்லை என்று முன்னாள் அமைச்சரும், தற்போதைய கோவில்பட்டி எம்.எல்.ஏ.வுமான கடம்பூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து அவர் கூறியதாவது: அதிமுகவுக்கு யாரும் சாதி சாயம் பூச முடியாது. அரசியல் களத்தில் ஒதுங்கி இருப்பதாக கூறிய சசிகலா கடந்த மாதம் அவரது ஆதரவாளர்களை செல்போன் மூலமாக தொடர்பு கொண்டு பேசி வருகிறார்.

அது போன்ற ஆடியோக்களை வெளியிட்டு வருகிறார். அதில் தான் விரைவில் உங்களை சந்திக்க இருப்பதாகவும், ஓ.பன்னீர்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் நடவடிக்கைகள் தொண்டர்களுக்கு எதிராக உள்ளதாக கூறியுள்ளார். இது போன்ற செயல்களுக்கு அதிமுக எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதிமுகவில் உறுப்பினராக இல்லாத சசிகலா கட்சியை பற்றி பேசுவது சரியல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News