உள்துறை அமைச்சர் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைவர்.. புதுவை பா.ஜ.க. துணைத் தலைவர்.!
உள்துறை அமைச்சர் முன்னிலையில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைவர்.. புதுவை பா.ஜ.க. துணைத் தலைவர்.!
By : Kathir Webdesk
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா காரைக்கால் வரும்போது, முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைவார்கள் என்று புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் வி.கே.கணபதி தெரிவித்துள்ளார்.
வருகின்ற 28ம் தேதி காரைக்காலுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகை புரிகிறார். இதற்காக பிரமாண்ட பொதுக்கூட்டத்திற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா உரையாற்ற உள்ளார்.
இந்நிலையில், பொதுக்கூட்டத்திற்கான பந்தல் அமைக்கும் பணிகள் இன்று தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக பந்தல் கால்கோள் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் புதுச்சேரி மாநில பாஜக துணைத் தலைவர் வி.கே.கணபதி மற்றும் காரைக்கால் மாவட்டத் தலைவர் ஜெ.துரை சேனாதிபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்பின்னர் வி.கே.கணபதி செய்தியாளர்களிடம் பேசியதாவது: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பங்கேற்கும் பொதுக் கூட்டத்துக்கான அனுமதி பெறப்பட்டுள்ளது. இது பிரமாண்டமான பொதுக்கூட்டமாக அமையும். இதில் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பாஜகவில் இணைவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.