Kathir News
Begin typing your search above and press return to search.

அடிக்கடி தேர்தல் நாட்டுக்கு நல்லதல்ல - ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமல்: ராஜ்நாத் சிங்!

அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அமல் என்றும் அடிக்கடி தேர்தல் நாட்டுக்கு நல்லதல்ல என்றும் பாதுகாப்புத்தூறை அமைச்சர் கூறுகிறார்.

அடிக்கடி தேர்தல் நாட்டுக்கு நல்லதல்ல - ஒரே நாடு ஒரே தேர்தல் முறை அடுத்த ஐந்து ஆண்டுகளில் அமல்: ராஜ்நாத் சிங்!
X

KarthigaBy : Karthiga

  |  1 Jun 2024 5:51 PM IST

அடிக்கடி தேர்தல் நடப்பது நாட்டுக்கு நல்லதல்ல என்றும் அடுத்த ஐந்தாண்டுகளில் ஒரே நாடு ஒரே தேர்தல் கொண்டுவரப்படும் என பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார். பாஜக வேட்பாளர் விஜயகுமார் துபேயை ஆதரித்து அமைச்சர் பேசுகையில் , அடிக்கடி தேர்தல் நடப்பது நாட்டுக்கு நல்லதல்ல .இதனால் அடுத்த ஐந்து ஆண்டுகளில் ஒரேநாடு ஒரே தேர்தல் முறை கொண்டுவர முயற்சி எடுக்கப்படும். சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றத்திற்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடப்பதை விரும்புகின்றனர்.

மோடியின் தலைமையின் கீழ் இந்தியா புதிய உச்சத்தை அடைந்துள்ளது. இந்தியா பேசுவதை உலக நாடுகள் கேட்கின்றன.பாகிஸ்தானில் உள்ள அரசியல்வாதிகள் கூட இந்தியாவை புகழ்கின்றனர் .இந்தியாவில் சமாஜ்வாடி கட்சியினர் இதை புரிந்து கொள்ள மறுக்கின்றனர். அவர்கள் மோடியை எதிர்க்கின்றனர். ஆட்சி அமைப்பு தலித்துகள் பிற்படுத்தப் பட்டவர்களுக்கு எதிராக உள்ளது என்று ராகுல் கூறுகிறார்.

அப்படி என்றால் அவரது கொள்ளு தாத்தா பாட்டி மற்றும் தந்தை ஆகியோர்களின் ஆட்சி பிற்படுத்தப்பட்டோர்கள் தலித்துகளுக்கு எதிரானது என்பதை அவர் ஒப்புக்கொள்கிறாரா? ராகுல் காந்தி தான் இதை தெரிவிக்கிறார் .இதன் மூலம் காங்கிரஸ் ஆட்சியை தலித்துகள் பிற்படுத்தப்பட்டோர்களுக்கு எதிரானது என்பதை ஏற்றுக்கொள்கிறார் என அர்த்தம். இதே போன்ற விசித்திரமான ஒரு தலைவரை நீங்கள் பார்த்திருப்பீர்களா? அறிவார்ந்த நபர் யாரும் காங்கிரசை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்றார்.


SOURCE :Dinamani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News