நாட்டின் ஜனநாயகத்தை கலைக்க முயல்கிறாரா ராகுல் காந்தி? லண்டனில் நிகழும் பரபரப்பு!
டெல்லியில் உள்ள நிகழ்ச்சியில் பேசிய ராகுல் காந்தியின் பேச்சால் இந்திய ஜனநாயகத்தை கலைக்க முயல்கிறார் என குற்றச்சாட்டு.
By : Bharathi Latha
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தற்பொழுது தன்னுடைய 150 நாள் பாதயாத்திரை பயணத்தை முடித்துக் கொண்டு லண்டன் பயணம் மேற்கொண்டு இருக்கிறார். குறிப்பாக அவர் பல்வேறு கூட்டங்களில் அங்கு பேசி வருகிறார். அந்த வகையில் அவர் லண்டனில் பேசும் பொழுது இந்தியாவைப் பற்றி தவறான ஒரு பிம்பத்தை ஏற்படுத்திருக்கிறார். உலக நாடுகள் தற்போது இந்தியாவை ஒரு புதிய உயரத்தில் வைத்து பார்க்க தொடங்கி இருக்கிறது. ஆனால் இங்கு இருக்கும் நபர்கள் வெளிநாடுகளில் சென்று தவறாக பல்வேறு கருத்துக்களை பகிர்ந்து வருகிறார்கள்.
அந்த வகையில் லண்டனில் உள்ள ஒரு நிகழ்ச்சியில் ராகுல் காந்தி பேசும் பொழுது அவர் கூறுகையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பிக்கள் பேசும் பொழுது மைக் அணைக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டி இருக்கிறார். இது முற்றிலும் பொய்யான தகவல் என்று இந்தியாவின் துணை ஜனாதிபதி அவர்கள் கூறியிருக்கிறார். இதற்கு எதிராக தன்னுடைய கண்டனத்தையும் அவர் பதிவு செய்திருக்கிறார். இலையில் பலம்பெரும் காங்கிரஸ் தலைவர் கரன்சிங் எழுதிய புத்தக வெளியீட்டு விழாவில் துணை ஜனாதிபதி மற்றும் மாநிலங்களவை தலைவர் ராகுல் காந்தி இந்த ஒரு செயலுக்கு கண்டனம் தெரிவித்து இருக்கிறார்கள். குறிப்பாக அவர்கள் பேசும் பொழுது இந்தியாவின் வரலாற்று சாதனைகளை தற்போது உலகம் முழுவதும் பாராட்டுகளை பெற்று வருகிறது.
ஆனால் நம்மிடையே இருக்கும் எம்.பிக்கள் சிலர் சிந்தனை இன்றி, நியாயமற்ற முறையில் நமது நாடாளுமன்றத்தை இழிவு படுத்தி வருகின்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் வெளிநாடுகளில் அப்படி பேசுவதை நம்மால் நியாயப்படுத்த முடியாது. அப்படி பேச என்ன தைரியம் நான் மௌனமாக இருந்தால் அரசியல் சட்ட கடமையை நிறைவேற்றவில்லை என்று அர்த்தம் இல்லை என்று தன்னுடைய கண்டனத்தை அவர் பதிவு செய்து இருக்கிறார். துணை ஜனாதிபதி மட்டுமல்லாது இந்தியாவில் இருக்கும் பல்வேறு தலைவர்களும் ராகுல் காந்தியின் இந்த ஒரு செயலுக்கு எதிர்ப்புகளை தெரிவித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது..
Input & Image courtesy: Oneindia News