Kathir News
Begin typing your search above and press return to search.

அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகி ஓட, ஓட விரட்டி வெட்டிப்படுகொலை!

சென்னையில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக நிர்வாகியை மர்ம கும்பல் ஒன்று ஓட, ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமைச்சர் நிகழ்ச்சியில் பங்கேற்ற தி.மு.க. நிர்வாகி ஓட, ஓட விரட்டி வெட்டிப்படுகொலை!

ThangaveluBy : Thangavelu

  |  21 Feb 2022 7:37 AM GMT

சென்னையில் அமைச்சர் சேகர் பாபு பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற திமுக நிர்வாகியை மர்ம கும்பல் ஒன்று ஓட, ஓட விரட்டி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை, காந்திநகரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் சேகர்பாபு கலந்து கொண்டார். அதன் பின்னர் நிகழ்ச்சி நடந்து முடிந்த பின்னர் அவர் புறப்பட்டு சென்றுவிட்டார். அப்போது அங்கு இருந்த திமுக பிரமுகர் மதன் என்பவரை மர்ம கும்பல் ஒன்று ஆயுதங்களை கொண்டு விரட்டி, விரட்டி வெட்டிப்படுகொலை செய்துள்ளது.

இந்த சம்பவம் பற்றி தகவல் அறிந்த போலீசார் மதனின் உடலைப் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். அமைச்சர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் போலீசார் எப்படியும் பாதுகாப்பு பணியில் இருந்திருப்பார்கள் அப்படி இருந்தும் திமுக நிர்வாகி வெட்டிப்படுகொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் சாதாரண பொதுமக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

Source, Image Courtesy: Puthiyathalaimurai

Next Story
கதிர் தொகுப்பு
Trending News