இந்த மாதமும் திருவண்ணாமலை கிரிவலத்திற்கு தடை விதித்த தி.மு.க அரசு !
By : Mohan Raj
இந்த மாதமும் திருவண்ணாமலையில் கிரிவலம் செல்ல தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
உலகப்புகழ்பெற்ற திருவண்ணாமலையில் மாதம்தோறும் பௌவுர்ணமி நாளன்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வது வழக்கம். இது பல நூற்றாண்டு காலமாக நடைபெற்று வரும் இந்துக்களின் வரலாற்று வழிபாட்டு மரபு. ஆனால் கொரோனோ பரவலை காரணம் காண்பித்து சில மாத காலமாகவே தி.மு.க அரசு தடை செய்து வருகிறது. அதுபோலவே இம்முறையும் பவுணர்மி நாளில் கிரிவலம் செல்ல தடை விதித்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் அலுவலகம் பிறப்பித்து உத்தரவில், "தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று பரவலை தடுக்கும் பொருட்டு அக்டோபர் 19ம் தேதி காலை 6 மணி முதல் அக்டோபர் 21ம் தேதி இரவு 12 மணி வரை கிரிவலம் செல்ல பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது" என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
பார்கள், மதுபான கடைகள், திரையரங்குகள் என தமிழகத்தில் அனைத்தும் நேர கட்டுப்பாடின்றி இயங்க அனுமதியளித்த அரசு கிரிவலம் செல்ல திட்டமிட்டே நடை விதித்து வருகிறது என இந்து மத ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.