Kathir News
Begin typing your search above and press return to search.

ஓட்டுக்காக இலவசம் கொடுப்பது நிதிநிலைமையை சீரழிக்கும் - எச்சரித்த வெங்கைய நாயுடு

ஓட்டுக்காக இலவசம் அளிப்பது நிதி நிலைமையை சீரழிக்கும் இலவச கலாச்சாரம் பெருகி வருவது நன்மை தராது வெங்கையாநாயுடு இதுபோன்ற எச்சரிக்கை விடுத்துள்ளார்

ஓட்டுக்காக இலவசம் கொடுப்பது நிதிநிலைமையை சீரழிக்கும் - எச்சரித்த வெங்கைய நாயுடு

KarthigaBy : Karthiga

  |  10 Aug 2022 9:30 AM GMT

ஓட்டுக்காக இலவசம் அளிக்கும் கலாச்சார மாநிலங்களின் நிதி நிலைமையை சீரழித்துவிடும் என்று வெங்கையா நாயுடு கூறினார்.

டெல்லியில் 2018 மற்றும் 2019ஆம் ஆண்டு பிரிவைச் சேர்ந்த இந்திய செய்தி தொடர்பு அதிகாரிகள் இடையே நேற்று துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார். இன்று ஓய்வுபெறும் அவர் துணை ஜனாதிபதியாக பேசிய கடைசி உரை இதுவேயாகும். வெங்காய நாயுடு பேசியதாவது:-

அரசுக்கும் மக்களுக்கும் இடையே செய்தித் தொடர்பு அதிகாரிகள் பாலமாக இருக்க வேண்டும். ஜனநாயகத்தில் அரசின் கொள்கைகள் மற்றும் முன்னெடுப்புகள் குறித்து மக்களுக்கு அவரவர் தாய் மொழியில் உடனுக்குடன் செய்தி போய்ச் சேர வேண்டும்.

அதுபோல் மக்களின் எதிர்பார்ப்புகளையும் அரசுக்கு உடனுக்குடன் அதிகாரிகள் தெரிவிக்க வேண்டும். சமூக வலைதளங்களின் பெருக்கத்தால் உடனடி இதழியல் என்ற போக்கு அதிகரித்து வருகிறது. இதனால் இதழியல் தர்மம் அழிந்து வருவது கவலைக்குரியது.

ஓட்டு வாங்குவதற்காக அரசியல் கட்சிகள் இலவசங்களை அளித்து வருகின்றன. இந்த இலவச கலாச்சாரம் மாநிலங்களில் நிதி நிலைமையை சீரழித்துவிடும்.

ஏழைகளுக்கும் உதவி தேவைப்படுவோருக்கு அரசு நிச்சயம் உதவ வேண்டும். அதே சமயத்தில் சுகாதாரம் கல்வி உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகியவற்றுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

சாதாரண விவசாயி மகனாக இருந்து இருந்து நாட்டின் இரண்டாவது உயரிய பதவிக்கு நான் வந்ததற்கு எனது கடின உழைப்பு, ஒரே மனநிலை கொண்ட அர்ப்பணிப்பு உணர்வு, தொடர் பயணம் மக்களுடன் உரையாடல் ஆகியவைதான் காரணங்கள் இவ்வாறு அவர் பேசினார்.






Next Story
கதிர் தொகுப்பு
Trending News