உள்ளாட்சி தேர்தலிலும் அ.தி.மு.க.வுடன் கூட்டணி நீடிக்கும்: ஜி.கே.வாசன் அதிரடி அறிவிப்பு.!
வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும். அதிமுக கூட்டணி வெற்றி சாதகமாக அமையவில்லை என்றாலும், நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.

By : Thangavelu
உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவுடன் கூட்டணி தொடரும் என்று தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் புதியதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை செப்டம்பர் 15ம் தேதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனை தொடர்ந்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் சட்டமன்ற தேர்தல் தோல்வி மற்றும் உள்ளாட்சித்தேர்தலை எதிர்கொள்வது பற்றி கட்சி நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இந்நிலையில், சென்னை ஆழ்வார்பேட்டையில் ஜி.கே.வாசன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: சட்டமன்ற தேர்தலுக்கு பின்னர் பத்திரிகை நண்பர்களை முதல் முறையாக சந்திக்கிறேன். காமராஜர் பிறந்தநாளை தடுப்பூசி விழிப்புணர்வு நாளாக கொண்டாடுவோம். இதற்காக வருகின்ற 15ம் தேதி காமராஜரின் பிறந்தநாள் அன்று மக்களிடம் சென்று தடுப்பூசிக்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உள்ளோம்.
மேலும், வருகின்ற உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக உடனான கூட்டணித் தொடரும். அதிமுக கூட்டணி வெற்றி சாதகமாக அமையவில்லை என்றாலும், நிறைய பாடங்களை கற்றுக் கொண்டோம். இவ்வாறு அவர் கூறினார்.
