இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin - தேவர் சமுதாயம் தி.மு.கவை புறக்கணிக்கிறதா?
இந்திய அளவில் ட்விட்டரில் ட்ரெண்டாகும் #GoBackStalin - தேவர் சமுதாயம் தி.மு.கவை புறக்கணிக்கிறதா?

இந்திய அளவில் ட்விட்டர் ட்ரெண்டிங் வைத்துதான் அரசியலின் அன்றைய நிகழ்வுகள் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகின்றன. அந்த வகையில் தமிழகமும் விதிவிலக்கல்ல. ட்விட்டரில் கூறும் கருத்துக்கள் தொலைக்காட்சி வரை விவாதம் ஆவதும். செய்தித்தாள்களில் கூட அவைகள் இடம்பிடிப்பதும் வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில் இன்றைய ஒரு நிகழ்வை ட்விட்டர் ட்ரெண்டாக மாற்றியுள்ளனர் நெட்டிசன்கள்.
இன்று பசும்பொன்.முத்துராமலிங்க தேவர் அவர்களின் 113வது ஜெயந்தி விழா நடைபெற்று வருகிறது. இதில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி முதல் தமிழகத்தின் முக்கிய அரசியல்வாதிகள் அனைவரும் கலந்துகொண்டு முத்துராமலிங்க தேவர் அவர்களின் திருவுருவசிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். இந்த விழாவில் பங்கேற்ற தி.மு.க தலைவர் ஸ்டாலினும் சென்றுள்ளார். அவரது வருகையை எதிர்க்கும் விதமாக ட்விட்டரில் #GoBackStalin என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் ட்ரெண்டாகி வருகிறது.
தமிழகத்தில் தேவர் சமுதாயம் பெருமளவில் தென் தமிழகமெங்கும் பரவியிருக்கும் நிலையில் தேவர் சமுதாயம் தி.மு.க மற்றும் அதன் தலைவர் ஸ்டாலினை புறக்கணிக்கிறதா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
தேசியமும், தெய்வீகமும் எனது இரு கண்கள் என கூறி தன் வாழ்நாள் முழுவதும் அதன்படி வாழ்ந்து வந்தவர் பசும்பொன் முத்துராமலிங்கம் தேவர் அவர்கள். அவர் கூறிய இரண்டுமே அதாவது தேசியமும் சரி, தெய்வீகமும் சரி இரண்டுமே தி.மு.கவிற்கு மற்றும் அதன் கூட்டணி கட்சிகளான தி.க, வி.சி.க போன்றவைகளுக்கு ஒத்துவராத ஒன்றாகும் இந்த நிலையில் முத்துராமதேவர் அவர்களின் கூற்றுப்படி அவரை மதிக்கும் விதமாக தி.மு.க'வை புறக்கணிக்க தேவர் சமுதாயம் தயாராகி விட்டதாக தெரிகிறது.