'இலவசங்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது தான் தவறு' - அண்ணாமலை
'இலவசங்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது தான் தவறு குடிமகனுக்கு அரசு செய்யும் கடமைகள் தவறு அல்ல' என அண்ணாமலை கூறியுள்ளார்.

By : Mohan Raj
'இலவசங்கள் மூலம் ஆட்சியைப் பிடிப்பது தான் தவறு குடிமகனுக்கு அரசு செய்யும் கடமைகள் தவறு அல்ல' என அண்ணாமலை கூறியுள்ளார்.
இலவசங்கள் மூலம் ஆட்சி பிடிப்பது தவறு என்றும் குடிமகனுக்கு அரசு செய்யும் கடமைகள் தவறல்ல எனவும் தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
சென்னையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது அவர் கூறியதாவது, 'பப்ளிக் கூட்ஸ்' எனப்படும் சுகாதாரம் கல்வி ஆகியவை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட வேண்டும் எனவும் இது மக்களின் அடிப்படை உரிமை எனவும் கூறினார்.
மேலும் வீடு, எரிவாயு, குடிநீர் போன்றவற்றை இலவசம் என்ற பெயரில் குறிப்பிடாமல் மத்திய அரசு வழங்குவதாகவும் இதை மக்களுக்கு செய்ய வேண்டிய கடமையாக பா.ஜ.க கருதுவதாகவும் அண்ணாமலை கூறினார்.
மேலும் ஓட்டுக்காக வழங்கப்படும் இலவசம் அறிவிப்பால் சுகாதாரம், பள்ளிகல்விக்கு போதிய நிதி ஒதுக்க முடியவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
