Kathir News
Begin typing your search above and press return to search.

'ஆளுநர் ரவி டெல்லி கிளம்பிட்டார் நீட் விலக்கு வந்துடும்!' - நம்பிக்கையுடன் கூறும் அமைச்சர் ஏ.வ.வேலு

'தமிழக கவர்னர் ரவி டெல்லி செல்கிறார் எனவே நீட் ரத்து எதிர்பார்க்கலாம் என தி.மு.க அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.

ஆளுநர் ரவி டெல்லி கிளம்பிட்டார் நீட் விலக்கு வந்துடும்! - நம்பிக்கையுடன் கூறும் அமைச்சர் ஏ.வ.வேலு
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 May 2022 6:45 PM IST

'தமிழக கவர்னர் ரவி டெல்லி செல்கிறார் எனவே நீட் ரத்து எதிர்பார்க்கலாம் என தி.மு.க அமைச்சர் ஏ.வ.வேலு கூறியுள்ளார்.

தமிழக பொதுப்பணித்துறையின் நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் ஏ.வ.வேலு இன்று காலை மதுரை வந்தார் பின்னர் அவர் ஒத்தக்கடை விவசாய கல்லூரி அருகே தமிழக முதல்வர் சாலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் புதிய சாலை மேம்பாட்டு பணிகளுக்காக பூமி பூஜையை தொடங்கி வைத்தார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது, 'மதுரை நெல்பேட்டை முதல் அவனியாபுரம் வரை பாலம் கட்டும் பணிக்கு திட்ட மதிப்பீடு நடந்து வருகிறது. தமிழக முதல்வர் கேட்டுக் கொண்டதன் அடிப்படையில் கலைஞர் நூலக கட்டிட பணியை பார்வையிட்டு ஆய்வு செய்தேன். கலைஞர் நூலகம் என்பதால் பணிகள் விரைந்து நடப்பதாக கூறுவது உண்மையல்ல மதுரை ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளை விரைந்து முடிக்க அதிகாரிகளிடம் அறிவுறுத்தியுள்ளோம்' என்றார் அவர்.


மேலும் மேலும் பேசிய அவர், 'தமிழக சட்டசபையில் நீட் விலக்கு சம்பந்தமான அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து தீர்மானம் நிறைவேற்றியது இது மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இந்த நிலையில் தமிழக கவர்னர் ரவி டெல்லி செல்கிறார்.எனவே தமிழக அரசின் கோரிக்கையை பரிசீலனை செய்யப்பட்டு ஓரிரு நாட்களில் நல்ல தகவல் எதிர்பார்க்கலாம்' என்றார்.


Source - Maalai Malar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News