Kathir News
Begin typing your search above and press return to search.

டெல்லிக்கு பொங்கல் வைக்க சென்ற ஆளுநர் - வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு உட்காந்திருக்கும் தி.மு.க

உச்சகட்ட பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் தமிழக ஆளுநர் இன்று டெல்லி விரைகிறார்.

டெல்லிக்கு பொங்கல் வைக்க சென்ற ஆளுநர் - வயிற்றில் நெருப்பை கட்டிக்கொண்டு உட்காந்திருக்கும் தி.மு.க

Mohan RajBy : Mohan Raj

  |  13 Jan 2023 9:14 AM GMT

உச்சகட்ட பரபரப்பான அரசியல் சூழல் நிலவும் நிலையில் தமிழக ஆளுநர் இன்று டெல்லி விரைகிறார்.

கடந்த சில நாட்களாகவே தமிழக ஆளுநர் மற்றும் தமிழக அரசு இரண்டு தரப்பிற்கும் இடையே பனிப்போர் சூழல் வெடித்து வருகிறது. குறிப்பாக தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி அவரின் செயல்பாடுகள் தமிழக அரசை எதிர்ப்பதாக இருக்கின்றன என தி.மு.க அரசு குறை கூறிவரும் நிலையில் பாரம்பரியம், கலாச்சாரத்தை காக்க வேண்டும் என்றதே ஆ.என்.ரவி நிலைப்பாடாக உள்ளது.

அதிலும் குறிப்பாக தமிழ்நாடு என கூறாமல் இனி தமிழகம் என்று கூறவேண்டும் தேசிய ஒருமைப்பாடு தான் நமக்கு முக்கியம் என ஆளுநர் ஆர்.என்.ரவி கூறுவதும் தேசிய ஒருமைப்பாடு என்றாலே தொண்டையில் சாப்பிட்டது சிக்கிக்கொண்டது போல் தி.மு.க விழிப்பது இந்த பனிப்போர் சூழலுக்கு அச்சாணியாக இருந்து வருகிறது.

இந்நிலையில் கடந்த வாரம் 2023 ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை தொடர் கூட்டத்தொடர் தொடங்கியது, இதில் முதல் உரை ஆளுநர் உரையுடன் துவங்கப்பட்டது. அன்று நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரின் முதல் கூட்டத்தொடரில் தி.மு.க அரசு எழுதிக் கொடுத்த உரையை படிக்காமல் அதில் உள்ள சில வார்த்தைகளை ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்தார். தி.மு.க அரசு தவிர்த்த உரையை படிக்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி தவிர்த்து மட்டுமின்றி முதல்வர் ஸ்டாலின் பேசிக் கொண்டிருக்கும் பொழுது சட்டப்பேரவையை விட்டு வெளிநடப்பு சென்ற விவகாரமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

உடனே தி.மு.க அரசு தரப்பில் மாநில உரிமைகளை ஆளுநர் பறிக்கிறார், நாங்கள் எழுதிக் கொடுத்ததை படிக்க மாட்டேங்கிறார், மரபை மீறிவிட்டார், ஆளுநர் ஆர்.எஸ்.எஸ் கைப்பாவையாக நடந்துகொள்கிறார் என குறை கூறியது மட்டுமல்லாமல் 'கெட் அவுட் ரவி' என ட்விட்டரில் ட்ரெண்ட் செய்தது மட்டுமின்றி அன்று இரவே சென்னை மாநகர் முழுவதும் 'கெட் அவுட் ரவி' என்ற வாசகத்துடன் போஸ்டர் அடித்து ஒட்டியது தி.மு.க தரப்பு.

அன்று மாலையிலேயே ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து அறிக்கை வெளியிடப்பட்டது, அந்த அறிக்கையில் தி.மு.க அரசு தயாரித்து கொடுத்த உரையில் உண்மைக்கு புறம்பான தகவல்கள் இருக்கின்றன குறிப்பாக சட்டம் ஒழுங்கு குறித்த தகவலில் ஆளுநர் அவர்களுக்கு ஒப்புதல் இல்லை எனவும் கூறப்பட்டது. மேலும் இந்த உரையை மாற்ற கோரினால் அந்த உரை அச்சுக்கு போய்விட்டதால் மாற்ற முடியாது என கூறியதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டது, இதனால் அந்த தயாரிக்கப்பட்ட உரையை படிப்பதற்கு ஆளுநருக்கு ஒப்புதல் இல்லை எனவும் விளக்கம் அளிக்கப்பட்டது.

மேலும் இதனை தொடர்ந்து தி.மு.க அரசு தரப்பில் ஆளுநர் விவகாரம் தொடர்பாக குடியரசுத் தலைவரை சந்தித்து தி.மு.க எம்.பிக்கள் குழு மனு அளித்தது. சட்டத்துறை அமைச்சர் ரகுபதி தலைமையில் தி.மு.க எம்.பிக்கள் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை டெல்லியில் சந்தித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் அளித்த மனுவை குடியரசுத் தலைவரிடம் ஒப்படைத்து ஆளுநர் குறைத்து முறையிட்டுள்ளனர். அதில் 'தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மாநில உரிமைகள் விவகாரத்தில் தலையிடுவதாகவும், ஆளுநரை திரும்ப பெற வேண்டும்' எனவும் புகார் அளிக்கப்பட்டிருந்தது. மேலும் இது தொடர்பாக 'நான் பார்க்கிறேன்' என குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு கூறியதாகவும் தி.மு.க எம்.பி டி.ஆர்.பாலு தெரிவித்தார்.

எந்த நிலையில் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி டெல்லி செல்கிறார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் நடந்த விவகாரம் தொடர்பாக ஏற்கனவே உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு அறிக்கை அளித்துள்ள நிலையில் தற்போது இன்று ஆளுநர் டெல்லி சென்று இருப்பது தமிழக அரசியல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. மேலும் டெல்லி சென்ற ஆளுநர் குடியரசுத் தலைவர், உள்துறை அமைச்சர் ஆகிய இருவரையும் சந்திக்க உள்ளதாகவும் ஆளுநர் தரப்பு வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன.

அந்த சமயம் தமிழக அரசியல் கள நிலவரங்கள், தமிழக அரசின் நடவடிக்கைகள், சட்டப்பேரவையில் ஆளுநர் நடத்தப்பட்ட விவகாரம் தொடர்பாகவும் நடந்த சம்பவங்களை அறிக்கையாகவும் நேரிலும் அவர் விவரிப்பார் எனவும் கூறப்படுகிறது. பரபரப்பான சூழல் மற்றும் பொங்கல் பண்டிகை கொண்டாட்ட மனநலையில் தமிழகம் இருக்க இருக்க தி.மு.க'வினருக்கு ஆளுநர் ரவி டெல்லி செல்வது அடிவயிற்றில் புளியை கரைத்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News