பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி'க்கு கொண்டு வந்தா நாங்க எப்படி பொழைக்குறது? எதிர்த்து நிற்கும் தி.மு.க !
Breaking News.
By : Mohan Raj
ஜி.எஸ்.டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என தமிழகத்தில் ஆளும் தி.மு.க அரசு கடுமையாக எதிர்த்துள்ளது.
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் 45-வது ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் பல்வேறு பொருள்களுக்கான ஜி.எஸ்.டி வரி விலக்கு, ஜி.எஸ்.டி வரம்பிற்கும் கொண்டு வருதல் என பல முக்கிய அம்சங்கள் விவாதிக்கப்பட்டன. குறிப்பாக ரூ.16 கோடி வரை விற்கப்படும் உயிர் காக்கும் மருந்துகளான Zolgensma & Viltepso ஆகிய மருந்துகளுக்கு இனி ஜி.எஸ்.டி யில் வரியிலிருந்து முழுமையான விலக்கு அளிக்க முடிவு செய்துள்ளதா நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
மேலும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டுவர தமிழ்நாடு, மேற்கு வங்கம், கேரளா போன்ற மாநிலங்கள் எதிர்த்துள்ளதாக நிதியமைச்சர் தெரிவித்தார். இது குறித்து கூறிய அவர், "ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசலை கொண்டுவரக் கூடாது என அனைத்து உறுப்பினர்களும் கருத்து தெரிவித்துள்ளனர்" என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "கொரோனா மருந்துகளுக்கான ஜி.எஸ்.டி வரிச்சலுகை டிசம்பர் மாதம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கப்பல் மற்றும் விமானம் மூலம் ஏற்றுமதி செய்யப்படும் சரக்குகளுக்கான போக்குவரத்துக்கு செப்டம்பர் 30 ஆம் தேதி வரை ஜி.எஸ்.டியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது" என்றார்.
தமிழகத்தில் விடியலை தருகிறோம் என கோடிகளில் விளம்பரம் செய்து வரும் தி.மு.க அரசு பெட்ரோல், டீசலை ஜி.எஸ்.டி வரம்பிற்குள் கொண்டு வருவதை எதிர்த்துள்ளது. அவ்வாறு பெட்ரோல், டீசல் ஜி.எஸ்.டி வரம்பிற்குள் வரும் பட்சம்தில் ரூ.25 வரை விலை குறைய வாய்ப்புள்ளது. மத்திய அரசை எதிர்க்கிறேன் என்ற பெயரில் தமிழக மக்கள் வயிற்றில் தி.மு.க அடித்துள்ளது.