Kathir News
Begin typing your search above and press return to search.

குஜராத் எம்.பி., அபய் பரத்வாஜ் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்.!

குஜராத் எம்.பி., அபய் பரத்வாஜ் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்.!

குஜராத் எம்.பி., அபய் பரத்வாஜ் காலமானார்.. பிரதமர் மோடி இரங்கல்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  1 Dec 2020 8:08 PM GMT

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு வந்த எம்.பி., அபய் பரத்வாஜ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குஜராத்தை சேர்ந்த அபய் பரத்வாஜ் 66, கடந்த ஜூன் மாதம் பாஜக சார்பில் எம்.பி.,யாக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டார். இதனையடுத்து அவர் ராஜ்கோட்டில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.


மூச்சு திணறல் பிரச்னை காரணமாக செப்டம்பர் 15ம் தேதி முதல் அவருக்கு செயற்கை சுவாசக் கருவி உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். இவரது மறைவிற்கு பிரதமர் மோடி உட்பட பல தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இவரது மறைவிற்கு குஜராத் மாநில முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் உட்பட பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News