Kathir News
Begin typing your search above and press return to search.

பா.ஜ.க வளர்வது பொன்னையனுக்கு பிடிக்கவில்லை - போட்டு உடைக்கும் ஹெச்.ராஜா

'பா.ஜ.க வளர்ந்து வருகிறது என்ற ஆதங்கத்தில் பொன்னையன் பேசி இருப்பார்' என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

பா.ஜ.க வளர்வது பொன்னையனுக்கு பிடிக்கவில்லை - போட்டு  உடைக்கும் ஹெச்.ராஜா

Mohan RajBy : Mohan Raj

  |  3 Jun 2022 5:45 AM GMT

'பா.ஜ.க வளர்ந்து வருகிறது என்ற ஆதங்கத்தில் பொன்னையன் பேசி இருப்பார்' என ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார்.

நேற்றைய முன்தினம் அ.தி.மு.க'வின் அம்மா பேரவை மாவட்ட நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அக்கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான பொன்னையன் கூறுகையில், 'தமிழ்நாட்டில் அ.தி.மு.க தான் எதிர்க்கட்சி, பா.ஜ.க தன் எதிர்க்கட்சி போல முன்னிறுத்துகிறது அதனை முறியடிக்க வேண்டும். இதற்கு இணையத்தில் ஐ.டி விங் சிறப்பாக செயல்பட வேண்டியது அவசியம்' என பேசியிருந்தார், இவரது கருத்தால் சலசலப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து பா.ஜ.க'வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா கூறுகையில், 'பொன்னையன் அ.தி.மு.க நிர்வாகத்தில் ஆக்டிவாக இல்லை! பா.ஜ.க வளர்ச்சி அடைந்து வருகிறது. ஆனால் அவர் வளரவில்லை அவருக்கு வயதாகிவிட்டது, அவர் சொல்வதை சீரியஸாக எடுத்துக்கொள்ளத் தேவையில்லை. இதை இ.பி.எஸ், ஓ.பி.எஸ் சொன்னால் கருத்து எனக்கூறலாம், பா.ஜ.க வளர்ந்து வருகிறது என நேற்று தெரிந்திருக்கும். மேலும் இன்னும் வளர்வதை தமிழக மக்கள் பார்க்கத்தான் போகிறார்கள்! திராவிட மாடலுக்கு மாற்று பா.ஜ.க என்பதை மக்கள் புரிந்து கொள்ளத் துவங்கி விட்டனர்' என கூறினார்.


Source - News 18 Tamil Nadu

Next Story
கதிர் தொகுப்பு
Trending News