தி.மு.க. தேர்தல் அறிக்கை டிஷ்யூ பேப்பர் போன்றது.. ஹெச். ராஜா விமர்சனம்.!
அதிமுக அரசு நிறைவேற்றிய திட்டங்கள் மற்றும் தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களை மாற்றி அதனையே தேர்தல் அறிக்கையாக திமுக வெளியிட்டுள்ளது. இதனை அனைத்து தரப்பு மக்களும் புரிந்து கொண்டுள்ளனர். அதே போன்று திமுக தேர்தல் அறிக்கையை பாஜக தலைவர்கள் விமர்சனம் செய்து வருகின்றனர்.

அந்த வகையில், பாஜக முன்னாள் தேசிய செயலாளர் ஹெச். ராஜாவும் விமர்சனம் செய்துள்ளார். தற்போது காரைக்குடி தொகுதி பாஜக வேட்பாளராக நியமினம் செய்யப்பட்டுள்ளார். இதனிடையே தேவகோட்டையில் அவர் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன்பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது:
"அம்மா உணவகத்தின் பெயரை கலைஞர் உணவகம் என மாற்றி வைப்பது ஒரு தேர்தல் அறிக்கையா? நிலம் இல்லாதவர்களுக்கு நிலம் அளிப்போம் என திமுக தெரிவித்திருந்தது. அதனை வழங்கினார்களா? மேலும், திமுக தேர்தல் அறிக்கையில் புதிதாக ஒன்றும் இல்லை. அந்தத் தேர்தல் அறிக்கை டிஷ்யூ பேப்பர் போன்றது. திமுகவை மக்கள் நன்கு புரிந்து வைத்துள்ளனர். வரும் தேர்தலில் திமுகவுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள். இவ்வாறு அவர் பேசினார்.