Kathir News
Begin typing your search above and press return to search.

ஸ்டாலினுக்கு முதல்வராகும் வாய்ப்பு அவர் ஜாதகத்திலேயே இல்லை - போட்டு உடைத்த ஹெச்.ராஜா

ஸ்டாலினுக்கு முதல்வராகும் வாய்ப்பு அவர் ஜாதகத்திலேயே இல்லை - போட்டு உடைத்த ஹெச்.ராஜா

ஸ்டாலினுக்கு முதல்வராகும் வாய்ப்பு அவர் ஜாதகத்திலேயே இல்லை - போட்டு உடைத்த ஹெச்.ராஜா
X

Mohan RajBy : Mohan Raj

  |  26 Dec 2020 6:30 AM GMT

தமிழக அரசியலில் நிகழ்வுகளை அவ்வபோது சரியாக கணித்து விமர்சித்து வருபவர் பா.ஜ.க'வின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா அவர்கள். இன்று "முதல்வராகும் வாய்ப்பு ஸ்டாலினுக்கு அவர் ஜாதகத்திலேயே இல்லை" என அடித்து கூறியுள்ளார் ஹெச்.ராஜா அவர்கள்.

சிவகங்கையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பா.ஜ.க முன்னாள் தேசிய செயலாளர் ஹெச்.ராஜா கூறியதாவது. "வீரமங்கை வேலுநாச்சியார் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக போரிட்ட முதல் சுதந்திரப் போராட்ட வீரர் அவரது நினைவு நாளில் அவருக்கு வீரவணக்கம் செலுத்தினோம். வேலு நாச்சியாரின் வாழ்க்கை வரலாறு மறைக்கப்பட்டது குறித்த கேள்விக்கு நமது பாட புத்தகங்களில் கார்வெல் மொஹல் பேரரசு போன்றவர்களைப் பற்றிய பாட புத்தகத்தில் இருக்கிறது தமிழ் மண்ணின் மன்னர்களைப் பற்றிய வரலாறு பாட புத்தகத்தில் இல்லை. தமிழ் மன்னர்களின் வரலாற்றை இடம்பெறச் செய்ய வேண்டும். பாபருக்கு மகன் யார் என்று புத்தகத்தில் இருக்கு. ஆனால் ராஜராஜ சோழனுக்கு அப்பா யார் என்று சொல்லிக் கொடுக்கவில்லை. இப்படி தமிழக பாட புத்தகத்தில் வரலாற்று சிறப்புமிக்கவர்களின் பாடங்கள் புத்தகத்தில் இடம் பெறவேண்டும் " என்று கூறினார்.

மேலும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் பற்றிய கேள்விக்கு பதிலளித்த அவர் கூறியதாவது, "மக்கள் முடிவாக இருக்கிறார்கள் ஸ்டாலின் முதல்வராகும் வாய்ப்பு இல்லவே இல்லை. அவர் ஜாதகத்திலும் அது இல்லை" என தெரிவித்தார்.

இப்படி தி.மு.க'வினரின் கனவை கலைக்கும்படி கூறியதால் உடன்பிறப்புகள் மத்தியில் கடும் விமர்சனங்கள் கிளம்பி வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News