காங்கிரசுக்கு பதில் பாஜகவுடன் கூட்டணி வச்சிருந்தா இன்னும் முதலமைச்சராக இருந்திருப்பேன்.. குமாரசாமி வேதனை.!
காங்கிரசுக்கு பதில் பாஜகவுடன் கூட்டணி வச்சிருந்தா இன்னும் முதலமைச்சராக இருந்திருப்பேன்.. குமாரசாமி வேதனை.!
By : Kathir Webdesk
கடந்த 2018-ம் ஆண்டு கர்நாடக சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆட்சி அமைக்க தனிபெரும்பான்மை கிடைக்கவில்லை. இதனால் காங்கிரஸ், ஜனதாதளம் (எஸ்) கட்சிகள் கூட்டணி சேர்ந்து ஆட்சி அமைத்தது.
முதலமைச்சராக குமாரசாமி பதவி ஏற்றார். ஆனால் குமாரசாமி மீதான அதிருப்தி காரணமாக கூட்டணி கட்சிகளை சேர்ந்த 17 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து பாஜகவில் இணைந்தனர். இதனால் குமாரசாமி தலைமையில் நடந்த கூட்டணி ஆட்சி கலைந்தது.
இந்நிலையில், கர்நாடகத்தில் கிராம பஞ்சாயத்து தேர்தல் 2 கட்டமாக நடக்க உள்ளது. தேர்தல் தொடர்பாக ஆலோசனைக்காக மைசூரு சென்றிந்தார் குமாரசாமி. அங்கு கட்சி தொண்டர்களை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இதன் பின்னர் அவர் செய்தியாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில்: கர்நாடக சட்டசபை தேர்தல் முடிந்த பின்னர் காங்கிரசுடன் கூட்டணி அமைத்து மிகப்பெரிய வரலாற்று தவறை செய்து விட்டேன்.
காங்கிரசுடன் கூட்டணி வைத்ததற்கு பதிலாக, பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்தால், நான் இன்னும் முதலமைச்சராகவே பதவியில் தொடர்ந்திருப்பேன். கூட்டணி அரசு கவிழ காங்கிரஸ் தலைவர்கள் தான் காரணம் என்று தனது வேதனையை தெரிவித்தார். தற்போது குமாரசாமி பேசியது கர்நாடக அரசியலில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.