அன்புச்சகோதரர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து.. துணை முதலமைச்சர் ட்வீட்.!
அன்புச்சகோதரர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து.. துணை முதலமைச்சர் ட்வீட்.!

இந்திய சினிமா துறையின் சூப்பர் ஸ்டார் என்று அழைக்கப்படும் ரஜினிகாந்த் 1950-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 12ம் தேதி பிறந்தார். அவரது பிறந்த நாளன்று அரசியல் தலைவர்கள், அரசு அதிகாரிகள், சினிமா பிரபலங்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவிப்பார்கள்.
சினிமா துறை மட்டுமின்ற தற்போது ரஜினிகாந்த் அரசியலிலும் குதித்துள்ளார். அவர் தான் தொடங்கவுள்ள அரசியல் கட்சி குறித்து விரைவில் அறிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே, நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். இதையடுத்து, ரசிகர்களும், அரசியல் உட்பட பல்வேறு துறையினரும் நடிகர் ரஜினிகாந்திற்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை கூறிவருகின்றனர். இந்நிலையில், 70 வயதில் அடியெடுத்துவைக்க உள்ள நடிகர் ரஜினிகாந்திற்கு தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது: தனது அயராத உழைப்பாலும், அபாரத் திறமையாலும் தமிழ்த் திரையுலகில் தனிமுத்திரை பதித்து சூப்பர் ஸ்டாராக கோலோச்சி வரும் அன்புச்சகோதரர் ரஜினிகாந்த் மகிழ்ச்சியுடனும் நல்ல ஆரோக்கியத்துடனும், நீண்ட ஆயுளோடும் வாழ எனது இதயமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.