"நான் கலைஞரின் மகன்" என்ற பிரச்சார வாசகத்தை விடாமல் மீண்டும் கையில் எடுத்த ஸ்டாலின்! தோல்வி பயம்?
"நான் கலைஞரின் மகன்" என்ற பிரச்சார வாசகத்தை விடாமல் மீண்டும் கையில் எடுத்த ஸ்டாலின்! தோல்வி பயம்?
By : Mohan Raj
அனைத்து பிரச்சார யுக்திகளும் பலனளிக்காமல் போனதால் மீண்டும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் "நான் கலைஞரின் மகன்" என்ற பழைய வாசகத்தை மீண்டும் பிரச்சாரங்களில் பயன்படுத்த துவங்கியிருக்கிறார்.
திருவண்ணாமலையில் 2021'ம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சாரத்தை துவக்கி வைத்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் பேசுகையில் கூறியதாவது, "உங்களுக்கும் இந்த நாட்டு மக்களுக்கும் 100 சதவீதம் உண்மையாக இருப்பேன் என்ற வாக்குறுதியை திருவண்ணாமலையில் இருந்து தமிழ்நாட்டு மக்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்!
உங்கள் கவலைகளை, உங்களது கோரிக்கைகளை, உங்களது எதிர்பார்ப்புகளை, என்னிடம் நீங்கள் ஒப்படைத்துள்ளீர்கள். இனி இவை என்னுடைய கவலைகள், என்னுடைய கோரிக்கைகள், என்னுடைய எதிர்பார்ப்புகள். இவற்றுக்கு திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் தீர்வு காண்பேன்.
மலைகளால் உயர்ந்த திருத்தணி முதல் கடலால் சூழ்ந்த கன்னியாகுமரி வரை உள்ள தமிழ்நாட்டின் எல்லா ஊர்களுக்குமான அனைத்துத் திட்டங்களையும் அறிமுகப்படுத்தி செயல்படுத்திக் கொடுத்தவர்தான் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்! அதனால் தான் ஒரு முறை அல்ல, ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆனார்!
அத்தகைய தலைவர் தான் “சொன்னதைச் செய்வோம்; செய்வதைச் சொல்வோம்! - என்று சொன்னார். அவரது வழியில் இந்த ஸ்டாலினும் சொன்னதைச் செய்வான்! செய்வதைத் தான் சொல்வான்! என்ற உறுதிமொழியை நான் கோபாலபுரம் இல்லத்தின் வாசலில் இருந்து எடுத்துக் கொண்டேன்.
நான் கலைஞருடைய மகன் என்பதை மட்டும் மனதில் வைத்துக்கொள்ளுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். நான் கலைஞருடைய மகன். நம்பிக்கையோடு செல்லுங்கள்" என மீண்டும் மீண்டும் கூறி பிரச்சாரத்தை முடித்தார்.
கலைஞர் அவர்களை தமிழக மக்கள் நம்பாமல்தான் பத்து ஆண்டுகள் தி.மு.க கையில் ஆட்சியை தராமல் இருந்தார்கள் மக்கள். இப்பொழுது "கலைஞர் மகன் வந்திருக்கிறேன்" என்றால் மட்டும் தந்துவிடவா போகிறார்கள் என அரசியல் ஆர்வலர்கள் கூறுகின்றனர்.