அமித்ஷா வருகை எதிரொலி - அறிவாலயத்தில் 23ம் தேதி உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் பரபரக்கும் தி.மு.க.!
அமித்ஷா வருகை எதிரொலி - அறிவாலயத்தில் 23ம் தேதி உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் பரபரக்கும் தி.மு.க.!

தமிழக தேர்தல் அரசியல் களம் சூடு பிடிக்க துவங்கியுள்ளது. வரும் 21'ம் தேதி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருவதை தொடர்ந்து எதிர்கட்சிகளான தி.மு.க மற்றும் அதன் கூட்டணிகளான காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள் போன்ற கட்சிகள் பரபரக்க துவங்கிவிட்டன.
இதுநாள் வரையில் குறைகள் கூறி அரசியல் செய்து பழக்கப்பட்ட தி.மு.க'வோ இனி குறைகள் கூறும் அரசியல் மக்களிடத்தில் எடுபடாது இப்படியே போனல் மக்கள் தி.மு.க'வை வரும் தேர்தலில் ஒதுக்கிவிடுவார்கள் என்று நன்கு உணர்ந்துவிட்டார்கள்.
இந்த நிலையில் வரும் நவம்பர் 23-ம் தேதி தி.மு.க உயர்நிலை செயல் திட்டக்குழு கூட்டம் அக்கட்சியில் தலைவர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அமித்ஷா வருகையை ஒட்டி தங்கள் கட்சியை பலப்படுத்த இந்த கூட்டத்தை தி.மு.க கூட்டுகிறது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து தி.மு.க பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், "தலைவர் ஸ்டாலின் அவர்கள் உயர்நிலை செயல் திட்டக் குழுக் கூட்டம் வருகிற 23/11/2020 திங்கட்கிழமை காலை 10 மணியளவில் சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கழக அலுவலகத்தில் நடைபெறும்.
இதில், உயர்நிலை செயல்திட்டக்குழு உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன்" என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமித்ஷா வருகையை ஒட்டி தமிழக அரசியல் களம் பரபரப்புக்குள்ளாகியுள்ளது.