Kathir News
Begin typing your search above and press return to search.

அரசின் உயர் பொறுப்புகளில் இந்து மத வெறுப்பாளர்கள்.. கண்டனம் தெரிவித்த இந்து முன்னணி.!

தற்போது பாடத்திட்ட வடிவமைப்பு குழுவில் கடவுள் மறுப்பு மற்றும் இந்து மத வெறுப்பு கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட வீரபாண்டியனை நியமித்திருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது.

அரசின் உயர் பொறுப்புகளில் இந்து மத வெறுப்பாளர்கள்.. கண்டனம் தெரிவித்த இந்து முன்னணி.!
X

ThangaveluBy : Thangavelu

  |  28 July 2021 12:07 PM GMT

இந்து மத வெறுப்பாளர்களை உயர் பொறுப்புகளில் நியமித்து வருவதற்கு, இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்து முன்னணி தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு பாடத்திட்ட வடிவமைப்பு ஆலோசனைக்குழு உறுப்பினராக வீரபாண்டியன் நியமிக்கப்பட்டுள்ளார். கல்வியை, கற்பித்தலை கிறிஸ்துவர்களிடமும், இந்து மத வெறுப்பு கொள்கை உடையவர்களிடமும் ஒப்படைக்க அரசு முடிவு செய்து விட்டதாக தெரிகிறது. இது ஆபத்தானது.

தமிழர்களின் கலாசாரத்தை சீர்குலைக்கும் வகையில், கள்ளக்காதல் தவறல்ல, அது திருமணம் கடந்த உறவு, என புது விளக்கம் கொடுத்தவர் திராவிட இயக்க தமிழர் பேரவையின் நிறுவனர் வீரபாண்டியன். ஏற்கனவே தமிழக பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழக தலைவராக திண்டுக்கல் லியோனியை தமிழக அரசு நியமனம் செய்த போதே, மக்கள் கண்டனங்களை பதிவு செய்தனர்.

தற்போது பாடத்திட்ட வடிவமைப்பு குழுவில் கடவுள் மறுப்பு மற்றும் இந்து மத வெறுப்பு கொள்கையில் தீவிர ஈடுபாடு கொண்ட வீரபாண்டியனை நியமித்திருப்பது, வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது போன்றது.

தங்களை மதசார்பற்ற அரசு என்று கூறி கொள்ளும் தமிழக அரசு, கிறிஸ்துவர்களையும், கடவுள் மறுப்பாளர்களையும், இந்து மத வெறுப்பாளர்களையும் தொடர்ந்து உயர் பொறுப்புகளில் நியமிப்பது கண்டிக்கத்தக்கது. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News