Kathir News
Begin typing your search above and press return to search.

தொடர்ந்து தாக்கப்படும் இந்து மத உணர்வாளர்கள் - இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் !

தொடர்ந்து தாக்கப்படும் இந்து மத உணர்வாளர்கள் - இந்து முன்னணி நிர்வாகி மீது தாக்குதல் !
X

Mohan RajBy : Mohan Raj

  |  27 Sept 2021 1:15 PM IST

இந்து முன்னணி மற்றும் இந்து மத ஆர்வலர்கள் தொடர்ந்து தாக்கப்படுவது தமிழகத்தில் அதிகரித்துள்ளது.

தமிழகத்தின் பல இடங்களில் இந்து மதத்திற்கு ஆதரவாகவும், இந்து சமய கோவில்களுக்கு பாதுகாப்பாகவும் போராடி வரும் நபர்கள் குறிவைத்து மர்ம நபர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டு வருகின்றனர். சில சமயங்களில் இந்த தாக்குதலில் இந்து மத உணர்வாளர்கள் உயிரை விடும் அளவிற்கும் கொடூர தாக்குதல்கள் நடத்தப்படுகின்றன. முன்பெல்லாம் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடந்த சம்பவம் சமீப வருடங்களாக வாரம் ஒருமுறையேனும் செய்திகளில் வரும் அளவிற்கு அடிக்கடி நடந்து வரும் நிகழ்வுகளாகிவிட்டது.

அந்த வகையில் நேற்று இரவு கோவை வடக்கு மேட்டுபாளையத்தில் மர்ம நபர்களால் இந்து முன்னணி நிர்வாகி சந்திரசேகர் கொடூரமாக தாக்கப்பட்டார். பின்னர் அக்கம்பக்கத்திலுள்ளவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். இதனையடுத்து மருத்துவமனையில் இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம் அவர்கள் தாக்குதலால் காயம்பட்ட சந்திரசேகரை மருத்துவமனைக்கு நேரில் சென்று நலம் விசாரித்து ஆறுதல் கூறினார். போலீசார் இது குறித்து வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.


Source - Hindhu Munnani

Next Story
கதிர் தொகுப்பு
Trending News