Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக் கோவில் எரிக்கப்பட்ட சம்பவம்: ஐ.நா சபையில் பாகிஸ்தானை கண்டித்த இந்தியா.!

இந்துக் கோவில் எரிக்கப்பட்ட சம்பவம்: ஐ.நா சபையில் பாகிஸ்தானை கண்டித்த இந்தியா.!

இந்துக் கோவில் எரிக்கப்பட்ட சம்பவம்: ஐ.நா சபையில் பாகிஸ்தானை கண்டித்த இந்தியா.!

Saffron MomBy : Saffron Mom

  |  24 Jan 2021 7:30 AM GMT

ஐக்கிய நாடுகள் மத வழிபாட்டுத் தலங்களை பாதுகாக்க வேண்டுமென்று வியாழக்கிழமை அன்று ஒரு உறுதிமொழியை ஏற்றுக் கொண்டது.

பாகிஸ்தானின் கைபர் மாகாணத்தில் ஒரு ஹிந்து கோவில் மீது ஒரு கும்பல் தீவைத்து எரித்த நிகழ்வை நினைவுபடுத்திய இந்தியா இந்நிகழ்வில் பாகிஸ்தான் மீது கண்டனம் தெரிவித்தது.

பாகிஸ்தானில் மிக சமீபத்தில் டிசம்பர் 2020இல் ஒரு வரலாற்று சிறப்பு மிகுந்த ஹிந்து கோவில், தாக்கப்பட்டு ஒரு கும்பலால் தீவைத்து பாகிஸ்தானின் கராக் மாவட்டத்தில் எரிக்கப்பட்டது.

சட்டப்பூர்வமான அமைப்புகளின் ஆதரவுடன், ஒத்துழைப்புடனும் இந்த தாக்குதல் நடைபெற்றது. ஒரு வரலாற்று சிறப்பு மிகுந்த கோவில் தரைமட்டமாக்கப்படும் பொழுது அவர்கள் ஊமையான பார்வையாளர்களாக நின்று வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்று ஐக்கிய நாடுகளுக்கான இந்திய தூதுவர் திருமூர்த்தி தெரிவித்தார்.

இந்தியாவுடைய அறிக்கையில் மேலும், பாகிஸ்தான் நாட்டில்தான் மிகச் சமீபத்தில் ஒரு இந்துக் கோவில் சூறையாடப்பட்டது. அங்கே சிறுபான்மையினரின் உரிமைகள் பறிக்கப்படுகின்றன. அத்தகைய ஒரு நாடு அமைதி கலாச்சாரம் என்ற தீர்மானத்தின் துணை தலைவராக இருப்பது மிகுந்த வேடிக்கையாக உள்ளது. பின்னால் ஒளிந்து கொள்வதற்கு இந்த மாதிரியான தீர்மானங்கள் பாகிஸ்தானுக்கு ஒரு திரை போல அமைந்து விடக் கூடாது என்று தெரிவித்தது.

பாகிஸ்தானின் வடமேற்கு நகரமான கராக் நகரில் உள்ள தெரி கிராமத்தில் உள்ள கிருஷ்ண துவாரா கோவிலுடன், ஸ்ரீ பரமன் ஜி மகாராஜின் சமாதி 1500 பேர் கொண்ட இஸ்லாமியவாத கும்பலால் அழிக்கப்பட்டது.

இந்த கோவில் கூடுதல் நிலத்தை ஆக்கிரமித்து உள்ளதாக இந்த கும்பல் குற்றம்சாட்டியது. இச்செய்தி சமூகவலைதளங்களில் பரவி பாகிஸ்தானுக்கு கடும் அவப்பெயரை ஏற்படுத்தி தந்தது. இதற்கு பிறகு இந்த தாக்குதல் தொடர்பாக டஜன் கணக்கான நபர்கள் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த கோயில் மீதான தாக்குதலில் சுமார் 1500 பேர் பங்கேற்றனர் .

பாகிஸ்தானின் மத விவகார அமைச்சர் இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்தார். ஹிந்து சமூகத்தின் பிரதிநிதியான வழக்கறிஞர் ரோகித் குமார் கூறுவதாக பாகிஸ்தான் உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ள தகவல்களின் படி, எழுப்பப்பட்டிருந்த ஹிந்து கோவில் ஏற்கனவே அதற்கு ஒதுக்கப்பட்ட இடத்தை விட அதிகமாக எதையும் ஆக்கிரமிக்கவில்லை என்று தெரிவித்தார். அந்த கிராமத்தில் இந்துக் கோவிலை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஹிந்துக்கள் போராட்டம் செய்ததாக கூறப்படுகிறது.

இந்த கோவில் 1997 ஆம் ஆண்டில் முதன்முதலாக தாக்கப்பட்டு இடிக்கப்பட்டது. 2015ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டிற்கு பிறகு உள்ளூர் சமூகம் இந்த கோயிலை புதுப்பிக்க ஒப்புக்கொண்டது. கோயிலின் புனரமைப்பின் போது ஒதுக்கப்பட்ட நிலம் தொடர்பாக ஒரு சர்ச்சை ஏற்பட்டது. இது பிரச்சினைக்கு வழி வகுத்து. இப்பொழுது மறுபடியும் சூறையாடப்பட்டுள்ளது.

இந்த கோவில் குரு ஸ்ரீ பரமன் தயால் 1919 ஆம் ஆண்டில் இந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்டு அங்க ஒரு கோவில் கட்டப்பட்டது.

பாகிஸ்தானில் இந்து, சீக்கிய வழிபாட்டுத்தலங்கள் தொடர்ந்து சூறையாடப்பட்டும், இந்து, கிறிஸ்தவ, சீக்கிய பெண்களின், சிறுமிகளின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் இல்லாமல் இருப்பதும் இந்தியாவில் குடியுரிமை சட்டத் திருத்தத்திற்கு வழிவகுத்தது. நாளுக்கு நாள் இந்த அட்டூழியங்கள் அதிகரித்து வருவதால் இந்திய அரசு வெளிப்படையாக பாகிஸ்தானிடம் பிரச்சனைகளை எடுத்துச் செல்ல வேண்டும் என்ற கோரிக்கையும் பலமாக உருவாகியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News