சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. ரஜினியை சந்திக்க திட்டம்.!
சென்னை வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா.. ரஜினியை சந்திக்க திட்டம்.!
By : Kathir Webdesk
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா வருகின்ற 14-ஆம் தேதி சென்னை வருகிறார். மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஏற்கெனவே கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 21ம் தேதி சென்னை வந்தார். அப்போது பாஜகவுடன் அதிமுக கூட்டணி தொடரும் என்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அமைச்சர் அமித் ஷா மீண்டும் வரும் 14ம் தேதி சென்னை வருகிறார். துக்ளக் பத்திரிகையின் ஆண்டு விழாவில் பங்கேற்க அமித் ஷா சென்னை வர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அமித் ஷா சென்னை வருகையின்போது, நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து நலம் விசாரிக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், நடிகர் ரஜினிகாந்த் கட்சி தொடங்கும் முடிவை கைவிட்ட நிலையில், அவரிடம் அமித் ஷா ஆதரவு கேட்கலாம் என்ற தகவல் பேசப்பட்டு வருகிறது. அப்படி அவர் ஆதரவு அளித்தால் திமுகவுக்கு மிகப்பெரிய பாதிப்பு ஏற்படும். மீண்டும் ஆளுகின்ற கட்சியே ஆட்சியில் தொடரவும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
மேலும், அதிமுக-, பாஜக கூட்டணி இடையே தொகுதிப் பங்கீடு குறித்தும் பேச்சுவார்த்தை நடக்கலாம் எனக் கூறப்படுகிறது.