எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை.!
எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா படங்களுக்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை.!
By : Kathir Webdesk
தமிழகத்திற்கு மத்திய உள்துறை அமைச்சர் அரசு முறை பயணமாக வருகை புரிந்துள்ளார். இன்று சென்னையில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் பங்கு பெறுகிறார். இதனையொட்டி சென்னை கலைவாணர் அரங்கத்தில் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இந்நிலையில், கலைவாணர் அரங்கத்தில் மறைந்த முன்னாள் முதலமைச்சர்கள், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரின் உருவப்படங்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த படங்களுக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா மரியாதை செலுத்தினார்.
இதன் பின்னர் நிகழ்ச்சியில் பங்கேற்க சென்றார். மேலும், கொரோனா தொற்று காரணமாக கலைவானர் அரங்கில் பார்வையாளர்கள் பாதுகாப்பான முறையில் சமூக இடைவெளியுடன் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
ஒவ்வொரு இருக்கைக்கும் இடையில் ஒரு இருக்கை காலியாக விடப்பட்டிருந்தது. கொரோனாவால் அனைவரும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்பதற்காக இது போன்ற நடவடிக்கைகள் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.