Kathir News
Begin typing your search above and press return to search.

போதையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து அடித்த தி.மு.க கவுன்சிலரின் மாண்புமிகு கணவர்

அவிநாசியில் அரசு துவக்கப்பள்ளியில் புகுந்து தி.மு.க கவுன்சிலரின் கணவர் தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

போதையில் அரசு பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளிக்குள் புகுந்து அடித்த தி.மு.க கவுன்சிலரின் மாண்புமிகு கணவர்
X

Mohan RajBy : Mohan Raj

  |  20 Sept 2022 6:33 PM IST

அவிநாசியில் அரசு துவக்கப்பள்ளியில் புகுந்து தி.மு.க கவுன்சிலரின் கணவர் தலைமை ஆசிரியரை தாக்கும் வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

திருப்பூர் மாவட்டம் அவிநாசி கைகாட்டி புதூர் பகுதியில் அரசு ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி உள்ளது இதில் 60க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர்.


இந்தப் பள்ளியின் பின்புறம் உள்ள பாஸ்கர் என்பவர்கள் வீட்டில் இருந்த தினமும் பள்ளி வளாகத்திற்குள் குப்பைகள் கொட்டப்படுவதால் சுகாதாரக் கேடு ஏற்படுகிறது என தலைமை ஆசிரியர் குப்பைகளை இங்கு கொட்ட வேண்டாம் என பலமுறை தெரிவித்து வந்துள்ளார்.


இந்நிலையில் பள்ளிக்குள் உள்ள செடிகளில் பள்ளி மாணவர்கள் தண்ணீர் ஊற்ற சென்றபோது பக்கத்து வீட்டை சேர்ந்தவர் கழிவுநிரை பள்ளி மாணவர்கள் மீது ஊற்றி உள்ளார். இது குறித்து மாணவர்கள் எதிர்த்து கேட்ட பிறகு ஆத்திரம் அடைந்த பக்கத்தை விட்டு சென்ற பாஸ்கர் பள்ளி மாணவர்கள் ஆறு பேரை அடித்து விரட்டி உள்ளார் சம்பவம் குறித்து பள்ளி தலைமை ஆசிரியர் அவிநாசி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார், இதனையடுத்து சம்பந்தப்பட்ட பாஸ்கரை போலீசார் கண்டித்துள்ளனர்.


மேலும் மாணவர்கள் தாக்கப்பட்டதை அடுத்து பெற்றோர்கள் பள்ளியில் விசாரிப்பதற்காக வந்துள்ளனர் அப்பொழுது மாணவர்களை தாக்கிய பாஸ்கருக்கு ஆதரவாக அவிநாசி பேரூராட்சி 17-வது வார்டு உறுப்பினர் தி.மு.க'வைச் சேர்ந்த ரமணி என்பவரின் கணவர் துரை என்பவர் பள்ளிக்கு வந்து ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்களிடம் குடிபோதையில் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். மேலும் போதையில் பள்ளி குழந்தைகளின் பெற்றோர்களை அனைவரையும் ஒருமையில் அநாகரிமாக பேசியுள்ளார்.


அதற்கு தலைமை ஆசிரியர் நீங்க தப்ப தட்டிக் கேட்க வேண்டியது தானே எனக்கு கூறவும் கோபத்தின் உச்சிக்கு சென்ற தி,மு.க கவுன்சிலரின் கணவர் தலைமை ஆசிரியர் செந்தாமரை கண்ணனை கழுத்தை நெரித்து தாக்கி விட்டு அங்கிருந்து செல்கிறார். பள்ளி தலைமை ஆசிரியரை பள்ளி நேரத்தில் பள்ளி குழந்தைகளின் கண் முன்னே தாக்கிய சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.


தி.மு.க கவுன்சிலர் அருகில் இருந்தவர் தனது செல்போன் மூலம் வீடியோ எடுத்ததால் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் தற்போது வைரல் ஆகி வருகிறது.


Source - News 7 Tamil

Next Story
கதிர் தொகுப்பு
Trending News