Kathir News
Begin typing your search above and press return to search.

கோவையில் 70 லாரிகளில் ஹாட் பாக்ஸ்களுடன் முகாமிட்டுள்ள தி.மு.க.! பரபரப்பு தகவல்!

கோவையில் 70 லாரிகளில் ஹாட் பாக்ஸ்களுடன் முகாமிட்டுள்ள தி.மு.க.! பரபரப்பு தகவல்!

ThangaveluBy : Thangavelu

  |  15 Feb 2022 4:57 AM GMT

கோவையில் 70 லாரிகளில் ஹாட் பாக்ஸ்களுடன் திமுக அமைச்சர் செந்தில்பாலாஜி முகாமிட்டிருப்பதாக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி பரபரப்பான தகவலை கூறியுள்ளார்.

அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பேசும்போது, கோவையில் திமுக வெற்றி பெறுவதற்கு 70 லாரிகளில் ஹாட் பாக்ஸ்களுடன் அணில் அமைச்சர் செந்தில் பாலாஜி முகாமிட்டுள்ளார். அது மட்டுமின்றி கோவையில் அராஜகத்தையும், வன்முறையும் அதிகரித்துள்ளனர் என்றார்.

மேலும், கோவை சுகுணாபுரம் பகுதியில் உணவை சூடாக பராமரிக்கின்ற ஹாட் பாக்ஸ்களுடன் சரக்கு வாகனம் பிடிப்பட்டுள்ளது. அதிமுகவினர் தடுத்து நிறுத்தி காவல்துறையில் ஒப்படைத்தாலும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர். தேர்தலில் முறையாக வெற்றிபெற முடியாமல் திமுக குறுக்கு வழியை தேர்ந்தெடுத்துள்ளது எனவும் எடப்பாடி பழனிசாமி கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தார்.

Source,Image Courtesy: Facebook


Next Story
கதிர் தொகுப்பு
Trending News