ஓட்டல் உரிமையாளரிடம் கழுத்தில் கத்தி வைத்து ரூ.20 ஆயிரம் பறிப்பு.. திமுக பிரமுகர் அதிரடி கைது.!
ஓட்டல் உரிமையாளரிடம் கழுத்தில் கத்தி வைத்து ரூ.20 ஆயிரம் பறிப்பு.. திமுக பிரமுகர் அதிரடி கைது.!
By : Kathir Webdesk
திருச்சியில் ஓட்டல் உரிமையாளரிடம் கத்தியை கழுத்தி வைத்து ரூ.20 ஆயிரம் பறித்த திமுக பிரமுகர் உட்பட 4 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மேலும் தப்பியோடிய 2 பேரை தேடி வருகின்றனர்.
திருச்சி உறையூர் சாலையில் பாஸ்ட்புட் ஓட்டல் கடை நடத்தி வருபவர் சுகுமாரன் 39, இவர் நேற்று முன்தினம் இரவு கடையில் இருந்தார். அப்போது ஒரு கும்பல் காரில் வந்து இறங்கயது. அவர்கள் சுகுமாறனின் கழுத்தில் பட்டா கத்தியை வைத்து கொலை செய்துவிடுவதாக கூறி, கடையில் இருந்த ரூ.20 ஆயிரத்தையும் அவர் அணிந்திருந்த கைக்கடிகாரத்தையும் பறித்து சென்றுள்ளது.
இது பற்றி உறையூர் காவல் நிலையத்தில் சுகுமாறன் புகார் அளித்தார். மேலும், தன்னிடம் பணத்தை பறித்து சென்ற கும்பல் உறையூர் பகுதியை சேர்ந்த 57வது திமுக வார்டு செயலாளர் தாமுசேகர் 42, திருவானைக்காவலை சேர்ந்த ரவுட, பரணிதரன் 31, அவரது மனைவி வித்யா 25, ஸ்ரீரங்கத்தை சேர்ந்த நித்தியானந்தம், சங்கரநாராயணன் 25, பார்த்தசாரதி ஆகியோர் என கூறினார்.
இதனையடுத்து உறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து திமுக வார்டு செயலாளர் தாமுசேகர், பரணிதரன், அவரது மனைவி வித்யா, சங்கர் நாராயணன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய 2 பேரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.
ஓட்டல் உரிமையாளரிடம் பணம் பறித்த திமுக கட்சியை பார்த்து மக்கள் பயப்படும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இவர்கள் ஆட்சிக்கு வந்தால் தினமும் திருட்டு, கொலை, பாலியல் குற்றங்கள் என இவர்களின் பட்டியல் நீண்டு கொண்டே செல்லும். எனவே தமிழக மக்கள் சிந்தித்து செயல்படுவது அவசியம். இது போன்றவர்களை அடையாளம் கண்டு அவங்களுடைய கட்சியை விரட்டியடிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடைமையும் ஆகும்.