எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் கிடைத்தது? தி.மு.க-வின் மோசடியை தோலுரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
எத்தனை பேருக்கு 2 ஏக்கர் நிலம் கிடைத்தது? தி.மு.க-வின் மோசடியை தோலுரித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி!
By : Muruganandham M
திமுக 2006-ல் அப்போதிருந்த திமுக தலைவர் கருணாநிதி நிலமற்ற விவசாயிகளுக்கு 2 ஏக்கர் நிலம் கொடுப்பதாக சொன்னார். எத்தனை பேருக்கு நிலம் கிடைத்தது? அப்படி மக்களை ஏமாற்றுகின்ற கட்சி தான் திமுக என முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.
ஸ்டாலின் ஊர் ஊராகச் சென்று பெண்களை அழைத்து அமரவைத்து ஒரு திண்ணையில் பெட்ஷீட்டை போட்டு அமர்ந்து உங்களுக்கு என்ன பிரச்சனை இருக்கிறதென்பதை நீங்கள் மனு மூலமாக பெட்டியில் போட்டால், அதைப் பூட்டி, சீல் வைத்து நான் வீட்டிற்கு கொண்டு சென்று, 3 மாதத்தில் நான் முதலமைச்சராக ஆகி விடுவேன், 100 நாட்களில் உங்களுடைய பிரச்சனைகளை தீர்ப்பேன் என்கிறார்.
அதற்கு ரசீதும் கொடுக்கிறார். நாங்கள் கேட்கிறோம், 5 முறை திமுக ஆட்சி இருந்ததே, நீங்களும் துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்தீர்கள். உங்களுக்கு வயது 70 ஆகிவிட்டது, 70 ஆண்டுகாலமாக ஏன் இந்த மக்களை கண்டுகொள்ளவில்லை?
ஏன் இந்த மக்களின் பிரச்சனைகளை தீர்க்கவில்லை? பிரச்சனை தீர்ப்பதற்குத்தானே துணை முதலமைச்சர், உள்ளாட்சித்துறை அமைச்சர் ஆக ஆக்கினார்கள். ஆட்சியில் இருக்கும்போது மக்களை கவனிக்க மாட்டார்கள், மக்களின் பிரச்சனையை தீர்க்க மாட்டார்கள். ஆனால், வெற்றி பெறுவதற்காக, வாக்குகளைப் பெறுவதற்காக ஊர் ஊராக வந்து பொய் பேசி, நாடகமாடி, உங்களை ஏமாற்றி வாக்குகளை பெறுகின்ற கட்சி திமுக கட்சி. நான் எதுவும் பொய் பேசவில்லை.
நான் உங்களைப்போல கிராமத்தில் விவசாயக் குடும்பத்தில் வாழ்கின்றவன், இன்றைக்கும் நான் விவசாயி என்று சொல்லிக் கொண்டிருக்கிறேன். நான் மக்களோடு மக்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறேன். எனவே, மக்களின் துன்பங்கள், பிரச்சினைகளை நன்கு அறிந்தவன்.
எனவே, பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கு என்ன வழி என ஆய்வு செய்து, நாங்கள் திட்டங்களை தீட்டி செயல்படுத்துகிறோம். ஸ்டாலின் அப்படியல்ல. அவரது அப்பா முதலமைச்சராக இருந்தார், திமுக தலைவராக இருந்தார், எம்.எல்.ஏ சீட் கொடுத்தார்கள், எம்.எல்.ஏ ஆனார், துணை முதலமைச்சரானார். மக்களுடைய கஷ்டம் என்னவென்றே தெரியாது. கஷ்டமே தெரியாத ஒரு தலைவர் தான் திமுக தலைவர் என்று முதல்வர் பேசியுள்ளார்.