விநாயகர் சிலையை உடைத்த காவல்துறை அதிகாரியை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - ஹெச்.ராஜா !
Breaking News.
By : Mohan Raj
பா.ஜ.க'வின் தலைவர் ஹெச்.ராஜா, கரூரில் விநாயகர் சிலைகளை உடைத்த அதிகாரியை தமிழக டி.ஜி.பி சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என அறிக்கை விடுத்துள்ளார்.
இந்தியா முழுவதும் இன்று விநாயகர் சதுர்த்தி சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்து விரோத திராவிடர் கழக பின்புல தி.மு.க அரசு விநாயகர் சதுர்த்தி கொண்டாட தடை விதித்துள்ளது. இதனையடுத்து பல தரப்பில் இருந்தும் கண்டனங்கள் எழுந்தும் அவற்றை முதல்வர் ஸ்டாலின் கண்டு கொள்ளவில்லை. இந்த நிலையில் தமிழகத்தில் பல இடங்களில் மக்களே சிலைகளை வைத்து கொண்டாட துவங்கிவிட்டனர். ஆனால் அவற்றை காவல் துறையினரை வைத்து தி.மு.க அரசு அகற்றி வருகிறது.
நேற்று இரவு கரூரில் சிலர் அனுமதி இல்லாமல் விநாயகர் சிலையை கூட்டமாக எடுத்து சென்றனர், அதை போலீஸார் தலையிட்டு தடுத்தபோது ஏற்பட்ட தகராறில் சிலையின் சில பகுதிகள் சேதம் அடைந்து.
இந்நிலையில் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து பா.ஜ.க மூத்த தலைவர் ஹெச்.ராஜா, கரூரில் விநாயகர் சிலைகளை உடைத்த அதிகாரியை தமிழக டி.ஜி.பி உடனடியாக சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.