Kathir News
Begin typing your search above and press return to search.

144 தொகுதிகளில் சூறாவளி தேர்தல் வேலை, தமிழகத்தில் முழுவீச்சில் வேலை - பா.ஜ.க'வின் 'மிஷன் 2024'

பிரதமர் மோடி 144 தொகுதிகளை குறி வைத்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என தகவல் கிடைத்துள்ள்ளது.

144 தொகுதிகளில் சூறாவளி தேர்தல் வேலை, தமிழகத்தில் முழுவீச்சில் வேலை - பா.ஜ.கவின் மிஷன் 2024
X

Mohan RajBy : Mohan Raj

  |  11 Oct 2022 7:42 AM IST

பிரதமர் மோடி 144 தொகுதிகளை குறி வைத்து பிரச்சாரம் செய்யவிருக்கிறார் என தகவல் கிடைத்துள்ள்ளது.

கடந்த 2019 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்த 144 தொகுதிகளில் 40 இடங்களில் பிரதமர் நரேந்திர மோடி பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில் பிரச்சாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வரும் 2024 பாராளுமன்ற தேர்தலை குறி வைத்து பா.ஜ.க இப்பொழுதே பணிகளை மெல்ல துவங்கி விட்டது வரும் காலங்களில் அது முழு வீச்சு அடையும் 'பிரவாஸ் யோஜனா' என பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் கடந்த மே மாத முதலில் பல்வேறு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் இரண்டாம் கட்ட பிரச்சாரப் பணிகள் விரைவில் துவங்கப்பட உள்ளன கடந்த 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்த 144 தொகுதிகளை அடையாளம் கண்டு அந்த தீவிரப் பிரச்சாரம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. இந்த இரண்டாம் கட்ட பணிகளில் 40 மத்திய அமைச்சர்கள் ஈடுபடுத்தப்பட உள்ளனர். அவர்களுக்கு ஐந்து அம்ச பணி வழங்கப்பட்ட உள்ளது பிரச்சாரத் திட்டங்களை வகுப்பது, பா.ஜ.க அரசின் நலத்திட்டங்களை குறித்த தகவல்களை மக்களிடம் கொண்டு செல்வது, அரசியல் மேலாண்மை, பிரச்சாரத்தில் சொல்லப்பட வேண்டிய விஷயங்களை திட்டமிடுவது, தொகுதிகளின் தங்கி ஆய்வு செய்வது உள்ளிட்ட ஐந்து அம்சங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இந்நிலையில் 2019 லோக்சபா தேர்தலில் பா.ஜ.க தோல்வியடைந்த 144 தொகுதிகளில் 40 இடங்களில் நடக்கும் பிரமாண்ட பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி பிரச்சாரம் செய்ய உள்ளதாக சமீபத்திய தகவல் வெளியாகி உள்ளது.


Source - Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News