Kathir News
Begin typing your search above and press return to search.

ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: அடுத்த ஆளுங்கட்சியாகுமா பா. ஜ. க.?

ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: அடுத்த ஆளுங்கட்சியாகுமா பா. ஜ. க.?

ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தல் முடிவுகள்: அடுத்த ஆளுங்கட்சியாகுமா பா. ஜ. க.?

Saffron MomBy : Saffron Mom

  |  6 Dec 2020 10:39 AM GMT

ஹைதராபாத் உள்ளாட்சி தேர்தலில் பா.ஜ.க கடந்த முறை வெற்றி பெற்ற 4 வார்டுகளில் இருந்து பெரிதும் அதிகரித்து இம்முறை 48 வார்டுகளில் வெற்றி பெற்றுள்ளது. தெலுங்கானாவை ஆட்சி செய்துவரும் தெலுங்கானா ராஷ்டிரிய சமிதிக்கு (TRS) ஒரு முக்கிய எதிர்க் கட்சியாக தன்னை மக்கள் மனதில் பதிய வைத்துள்ளது.

இது ஒரு முனிசிபல் தேர்தலாக இருந்தாலும், பா.ஜ.க உள்துறை அமைச்சர் அமித் ஷா, உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மற்றும் பல முக்கிய தலைவர்களை பிரச்சாரத்தில் இறக்கினர். டிசம்பர் 4ஆம் தேதி அறிவிக்கப்பட்ட முடிவுகளில் இருந்து சில முக்கியமான விளைவுகள்:

பா.ஜ.க தன்னை முக்கியமான எதிர்க்கட்சியாக நிலை நிறுத்தியுள்ளது. 2023ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு இந்த ஹைதராபாத் உள்ளாட்சித் தேர்தலின் முடிவுகளை ஒரு அரைஇறுதி போல பா.ஜ க தலைவர்கள் பார்த்து வருகிறார்கள். 2018ல் ராஷ்டிரிய சமிதியிடமிருந்து தெலுங்கானா மாநிலத்தை கைப்பற்றுவதுதான் இறுதிப் போட்டியாக இருக்கும்.

2018ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க 119 இடங்கள் உள்ள சட்டசபையில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. 7 சதவீத ஓட்டு சதவீதத்தை மட்டுமே வாங்கியது. ஹைதராபாத், குறிப்பாக பழைய ஹைதராபாத் AIMIM ன் கோட்டையாக இருந்து வந்தது.

எனவே ஓட்டுகள் பா.ஜ.க, AIMIM, TRSக்கு இடையே மும்முனைப் போட்டியாக அமைந்தது. ஆனால் 2023ல் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலில் கண்டிப்பாக பா.ஜ.கவுக்கும் TRS ற்கும் இருமுனைப் போட்டியாக மட்டுமே இருக்கும்.

பா.ஜ.கவிற்கு கர்நாடகாவிற்கு பிறகு தென்னிந்தியாவில் ஒரு மிகப்பெரும் அடித்தளமாக தெலுங்கானா அமையப்போகிறது.

உண்மையை அறிந்து கொண்ட KCR:

தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதியின் தலைவரும், முதல்வர் சந்திரசேகர ராவின் மகனுமாகிய கே டி ராமாராவ், தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு தேர்தல் முடிவுகள் இல்லை என்பதை ஒப்புக்கொண்டார். தங்கள் எதிர்பார்த்ததை விட 20 முதல் 25 சீட்டுகள் குறைவாக கிடைத்ததாக ANI செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

தந்தையும் மகனும் தடுக்க முடியாமல் வளர்ந்து கொண்டிருக்கும் பா.ஜ.கவின் வளர்ச்சியை பற்றி TRS நிறைய யோசிக்க வேண்டியிருக்கும். டுபக்கா சட்டமன்ற இடைத் தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்த சில வாரங்களுக்குப் பிறகு தற்போது இந்த தோல்வியும் வருகிறது. TRS ன் தலைக்கனமும், ஒரு குடும்பம் நடத்தும் கட்சி என்று கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கும் அக்கட்சி பதில் அளிக்க வேண்டி இருக்கும். ஆனால் தங்களுடைய போக்கை மாற்றிக் கொண்டு செல்ல அவர்களுக்கு இன்னும் நேரம் இருக்கிறது. சட்டசபை தேர்தல் வர இன்னும் மூன்று ஆண்டுகள் இருக்கிறது.

AIMIM அடித்தளம் அப்படியே இருக்கிறது:

AIMIM அசாதீன் ஒய்வாசி இந்த தேர்தல் முடிவுகளில் திருப்தி அடைய காரணம் இருக்கிறது. பீகார் உள்ளிட்ட வெளி மாநிலங்களிலும் கட்சிக்கு ஆதரவு பெருகி வரும் நிலையில், ஹைதராபாத்தில் இருக்கும் அதன் பழைய ஆதரவு தளம் அப்படியே இருக்கிறது. AIMIM மைனாரிட்டி அரசியலை பின்பற்றுவதாக கூறப்படும் பாஜகவின் குற்றச்சாட்டுகள் AIMIM ஐ பாதிக்காமல், TRS ஐ பாதிக்கின்றன. ஆனால் AIMIM ன் செல்வாக்கு ஹைதராபாத்தை தாண்டி மாநிலத்தில் எங்கும் செல்வதில்லை. ஆனால் TRS-AIMIM ன் அறிவிக்கப்படாத கூட்டணியை பா.ஜ.க ஹைதராபாத்துக்கு வெளியே சரியான முறையில் கையாண்டு ஓட்டுகளை தன்வசம் இழுக்கும்.

காங்கிரஸின் மோசமான சரிவு:

காங்கிரஸ் தீவிரமாக பிரச்சாரத்தில் ஈடுபடவில்லை. தனது எதிர்க்கட்சி பதவியை பா.ஜ.கவிற்கு காங்கிரஸ் விட்டுக்கொடுத்த மற்றொரு மாநிலம் ஆகிவிட்டது தெலுங்கானா. AIMIM, பா.ஜ.க, TRS ஆகிய மூன்று கட்சிகளும் எந்த ஒரே விஷயத்தில் உடன்படும் என்றால், அது காங்கிரஸிற்கு தெலுங்கானாவில் எந்த செல்வாக்கும் இல்லை என்பதுதான்.

2018ஆம் ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலில் கூட காங்கிரஸ் 28.7 சதவிகித ஓட்டு சதவிகிதத்தையும் 19 இடங்களையும் வெற்றி பெற்றது. ஒன்றிணைந்த ஆந்திரப் பிரதேசத்தில் இருந்து தெலுங்கானா உருவாவதற்கு முக்கிய காரணமாக இருந்த காங்கிரஸ் கட்சிக்கு எதிராக இப்போது தெலுங்கானா மொத்தமும் திரும்பி விட்டது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News