பா.ஜ.க'வில் திறமையான தலைவர்கள் இருப்பதால் அசைக்க முடியாது - குஜராத் காங்கிரஸ் ஹர்திக் படேல் புகழாரம்

By : Kathir Webdesk
பா.ஜ.க தலைவர்கள் சிறந்த தலைமைப் பண்புகளைக் கொண்டிருப்பதாலும், சரியான முடிவுகளை எடுப்பதாலும் பாஜக பலமாக உள்ளது. அதை நாம் ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும். அவர்கள் முடிவெடுக்கும் திறன் கொண்டவர்கள் என குஜராத் மாநில காங்கிரஸ் செயல் தலைவர் ஹர்திக் படேல் கூறியுள்ளார்.
பா.ஜ.க-வுக்கு நல்ல வலுவான அடித்தளம் உள்ளது. சக்திவாய்ந்தவர்கள். எதிரிகளை ஒருபோதும் நாம் குறைத்து மதிப்பிடக்கூடாது. நம் எதிர்த்துப் போராட அந்த திசையில் செயல்பட வேண்டும் என்றார்.
குஜராத்தில் காங்கிரஸ் கட்சியால் எதுவும் செய்ய முடியவில்லை. காங்கிரஸ் கட்சிக்குத் தலைமை தான் பிரச்னை. குஜராத்தில் தனிப்பட்ட முறையில் யாரிடமும் எனக்கு பிரச்னை இல்லை. காங்கிரஸ் தலைமை யாரையும் வேலை செய்ய விடாது. யாராவது வேலை செய்தால் அவர்களைத் தடுத்து நிறுத்துகிறது. தலைமையிடம் எனது கவலையைத் தெரிவித்துள்ளேன்.
நான் உண்மையைச் சொல்லப்போகிறேன். கட்சியை விட்டு விலகுவதாக நினைக்க வேண்டாம். பாஜகவில் சேரும் எண்ணம் எனக்கு இல்லை. அப்படி ஒரு எண்ணம் எனது மனதில் எப்போதும் ஏற்பட்டதில்லை.
நான் பகவான் ராமரை நம்புகிறோன். என் தந்தை நினைவு நாளில் 4000 பகவத்கீதை பிரதிகளை விநியோகிக்க உள்ளேன். நான் இந்து தர்மத்தைச் சேர்ந்தவர்கள். இந்துவாக இருப்பதில் பெருமை கொள்கிறோம் என்று கூறினார்.
Inputs From: Vikatan
