Kathir News
Begin typing your search above and press return to search.

"எனக்கு ஒன்னும் தெரியாதுங்க!" - மு.க.அழகிரி பற்றிய கேள்விக்கு பம்மி பதுங்கிய உதயநிதி

"எனக்கு ஒன்னும் தெரியாதுங்க!" - மு.க.அழகிரி பற்றிய கேள்விக்கு பம்மி பதுங்கிய உதயநிதி

எனக்கு ஒன்னும் தெரியாதுங்க! - மு.க.அழகிரி பற்றிய கேள்விக்கு பம்மி பதுங்கிய உதயநிதி

Mohan RajBy : Mohan Raj

  |  7 Jan 2021 6:45 AM GMT

கடந்த 3'ம் தேதி மு.க.அழகிரி மதுரையில் கூட்டிய கூட்டத்தை பார்த்து ஸ்டாலின் தரப்பு ஆடிப்போய் உள்ளது. அந்த கூட்டத்தில் மு.க.அழகிரி "ஸ்டாலினால் இனி முதல்வர் ஆக முடியாது" என சவால் விடுத்தது கூட தி.மு.க'வினரின் தூக்கத்தை கெடுத்துள்ளது. இதனை தொடர்ந்து தி.மு.க'வின் பட்டத்து இளவரசர் உதயநிதி தன் பெரியப்பா மு.க.அழகிரி மீதுள்ள பயத்தில் இன்று வாய் திறக்காமல் அமைதியாக சென்றுள்ளார்.

தி.மு.க'விலிருந்து திட்டமிட்டு ஓரங்கட்டப்பட்ட மு.க.அழகிரி விரைவில் அரசியல் கட்சி தொடங்கப் போவதாக கடந்த 3 ஆம் தேதி அறிவித்து மதுரையில் தனது ஆதரவாளர்கள் கூட்டத்தை நடத்திக் காட்டியுள்ளார். இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பாக தி.மு.க'வினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த நிலையில் திருச்சி கல்லக்குடி ரயில் நிலையத்தை தி.மு.க பட்டத்து இளவரசர் மற்றும் இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் இன்று பார்வையிட்டார். பின்னர் அங்கு செய்தியாளர் சந்தித்த அவர், "எனது தாத்தா கலைஞர் கருணாநிதி இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்திய இடத்தை இன்று பார்வையிட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்தின் மீது இந்தியைத் திணிக்க வேண்டும் என தொடர்ந்து மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. இப்போது உள்ள ஆட்சியாளர்களான பா.ஜ.க எப்படியாவது தமிழகத்தில் இந்தியை திணிக்க வேண்டும் என கங்கணம் கட்டி செயல்படுகிறது. ஆனால் தமிழக மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். நாங்கள் இந்தி மொழிக்கு எதிரி கிடையாது. ஆனால் இந்தி திணிப்பை எதிர்க்கிறோம்" என ஜம்பமாக பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டியளித்து கொண்டிருந்தார்.

இதனை தொடர்ந்து ஒரு பத்திரிக்கையாளர், மு.க.அழகிரி ஸ்டாலினுக்கு எதிராக வைத்த விமர்சனங்கள் குறித்து கேள்வியை எழுப்பிய பொழுது சட்டென உதயநிதியின் முகம் மாறி அதுவரை இருந்த ஜம்பமான குரல் போய் பம்ம துவங்கிவிட்டார். அதற்கு பதிலாக, "எனக்கு அதுபற்றி எல்லாம் ஒன்றும் தெரியாது" என விருட்டென அங்கிருந்து கிளம்பிவிட்டார்.

பெரியப்பா மீது இவ்வளவு பயமா தி.மு.க'வின் பட்டத்து இளவரசருக்கு?

Next Story
கதிர் தொகுப்பு
Trending News