தேர்தலோடு கமல் எங்க போவாரோ தெரியலை.? அமைச்சரின் அதிரடி பேச்சு.!
தேர்தலோடு கமல் எங்க போவாரோ தெரியலை.? அமைச்சரின் அதிரடி பேச்சு.!
By : Kathir Webdesk
கோவில்பட்டியில் அமைச்சர் கடம்பூர் ராஜு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், வருகின்ற சட்டமன்றத் தேர்தலோடு மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவர் கமல்ஹாசன் காணாமல் போய்விடுவார்.
தலைவர் அந்தஸ்து, நடிகர் கமலுக்கு இன்னும் வரவில்லை. கமல் என்ன சொல்கிறார் என்பதை தெளிவாக சொல்லட்டும். அவர் பேச்சை பார்த்து மக்கள் குழம்பிப் போயுள்ளனர் என கடுமையாக விமர்சித்தார்.
மேலும், தமிழக சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கி கமல்ஹாசன், தேர்தல் பரப்புரையை தொடங்கி விட்டார். பரப்புரையின் போது, எம்.ஜி.ஆரின் வாரிசு நான் தான். அவரின் போட்டோவை சிறியதாக்கியவர்கள் என்னை எதிர்க்கிறார்கள் என்றெல்லாம் அதிமுக அரசை விமர்சித்தார். இது அதிமுகவினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பியது.
இதனிடையே கமல்ஹாசன் அதிமுகவில் இணைந்து எம்.ஜி.ஆர்.-ஐ., உரிமை கொண்டாடட்டும், எம்.ஜி.ஆரி.ன் பெயரை உபயோகித்து அதிமுக வாக்குகளை கலைக்க முடியாது என்றெல்லாம் அமைச்சர்கள் கருத்து தெரிவித்தனர். இது போன்ற சூழலில், அமைச்சர் கடம்பூர் ராஜு கமல்ஹாசன் காணாமல் போய்விடுவார் என கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.