Kathir News
Begin typing your search above and press return to search.

கிடைத்தது பாட்டிக்கு வீடு, ஆனால் விடியோவை எடுத்தவருக்கு போனது வேலை - அடுத்தடுத்து அம்பலமாகும் திராவிட மாடல் வேலைகள்

வேலம்மாள் பாட்டிக்கு தி.மு.க அரசு வீடு தரவில்லை என்பதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ காரணமாக இருந்த புகைப்படக்காரருக்கு வேலை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

கிடைத்தது பாட்டிக்கு வீடு, ஆனால் விடியோவை எடுத்தவருக்கு போனது வேலை - அடுத்தடுத்து அம்பலமாகும் திராவிட மாடல் வேலைகள்

Mohan RajBy : Mohan Raj

  |  28 Aug 2022 12:40 PM GMT

வேலம்மாள் பாட்டிக்கு தி.மு.க அரசு வீடு தரவில்லை என்பதை புகைப்படம் எடுத்து சமூக வலைதளங்களில் பரவ காரணமாக இருந்த புகைப்படக்காரருக்கு வேலை பறிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

நாகர்கோவில் மாநகராட்சியின் புகைப்பட கலைஞராக இருந்தவர் ஜாக்சன் ஹேர்பி, இவர் நாகர்கோவிலில் சேர்ந்த வேலம்மாள் பாட்டி என்கின்ற ஏழை மூதாட்டியை 2000 ரூபாய் பணமும், மளிகை பொருளும் வாங்கிய சிரித்த புகைப்படத்தை எடுத்தது வைரல் ஆகியது. இந்த படம் மூலம் வேலம்மாள் பாட்டியும் அனைவரின் மத்தியிலும் அறியப்பட்டார் முதல்வர் ஸ்டாலினும் இந்த படத்தை தனது சோசியல் மீடியாக்களில் பகிர்ந்து இருந்தார்.

இந்நிலையில் பாட்டியை புகைப்படம் எடுத்து வைராக்கிய அதே புகைப்படக் கலைஞர் ஜாக்சன் ஹெர்பி சில தினங்களுக்கு முன் வேலம்மாள் பாட்டில் வீடியோ ஒன்று சமூக வலைதளத்தில் வைரலாகியது. அந்த வீடியோவில் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களே நேரில் பார்க்கும்போது வீடு தருகிறேன் என்று சொன்னீர்கள் ஆனால் இதுவரை எனக்கு தரவில்லை என புகார் அளித்தார். இது சமூக வலைத்தளங்களில் தி.மு.க அரசின் விளம்பரத்தை அம்பலப்படுத்தியது.

இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நாகர்கோவில் மாநகராட்சி தற்காலிக புகைப்பட கலைஞர் பணியில் இருந்து அதிரடியாக நீக்கி உள்ளது ஜாக்சன் ஹெர்பியை நீக்கியுள்ளது. இதனால் அந்த புகைப்படக்காரர் தவித்து வருகிறார்.

Source - Asianet News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News