கட்சியை பதிவு செய்தால் நான் கருத்து சொல்கிறேன்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
கட்சியை பதிவு செய்தால் நான் கருத்து சொல்கிறேன்.. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.!
By : Kathir Webdesk
ரஜினி முதலி கட்சியை பதிவு செய்யட்டும். அதன் பின்னர் பதில் சொல்கிறேன் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அதிரடியாக கூறியுள்ளார்.சிவகங்கை மாவட்டத்தில் அரசு திட்டப்பணிகளை தொடங்கி வைத்தார். மேலும் நலத்திட்ட உதவிகளையும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வழங்கினார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அவரிடம் ரஜினி ஜனவரி மாதம் கட்சித் தொடங்குவது பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு அவர் முதலில் கட்சியைப் பதிவு செய்யட்டும். தற்போது அறிவிப்பு மட்டும்தான் வெளியிட்டுள்ளார். அவர் கட்சியை பதிவு செய்த பின்னரே அது குறித்து பதில் சொல்ல முடியும். அவருடைய கருத்தை தற்போது சொல்லியிருக்கிறார். கற்பனை விஷயத்துக்கு இப்போது பதில் கூறமுடியாது என்றார்.
ரஜினி அரசியல் கட்சி குறித்து பலரும் தங்களது கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர். அதே போன்று துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வாய்ப்பு இருந்தால் ரஜினியுடன் அதிமுக கூட்டணி அமைக்கும் என்று தெரிவித்தார். ஆனால், ஓபிஎஸ் பேசியது அதிமுகவின் கருத்து இல்லை, அது அவரது சொந்த கருத்து என அமைச்சர் ஜெயகுமார் விளக்கம் அளித்திருந்தார்.