தி.மு.க.,வில் ஒருபோதும் இணையமாட்டேன்.. கிருஷ்ணகிரி ரஜினி மன்ற செயலாளர் பரபரப்பு அறிக்கை.!
தி.மு.க.,வில் ஒருபோதும் இணையமாட்டேன்.. கிருஷ்ணகிரி ரஜினி மன்ற செயலாளர் பரபரப்பு அறிக்கை.!

கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் திமுகவில் இணைந்துவிட்டதாக தகவல்கள் பரவியது. இது அந்த மன்றத்தினர் மத்தியில் பரபரப்பாக பேசப்பட்டது.
இந்நிலையில், இந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளர் கே.வி.எஸ்.சீனிவாசன் விளக்கம் அளித்துள்ளார்.
அவர் அளித்துள்ள அறிக்கையில், நான் கிருஷ்ணகிரி மாவட்ட ரஜினி மக்கள் மன்ற செயலாளராக தொடர்ந்து செயல்படுவேன். நான் திமுகவில் இணைந்ததாக செய்தி தொலைக்காட்சிகளில் தவறான தகவல் வெளியிட்டுள்ளனர். இதனை யாரும் நம்ப வேண்டாம். நான் எப்போதும் தலைவரின் வழியில் எனது பணியை தொடர்ந்து மேற்கொள்வேன். எனவே, திமுகவில் இணைந்ததாக வெளியாகும் செய்தியை யாரும் நம்ப வேண்டாம். அந்த கட்சியில் ஒருபோதும் இணைய மாட்டேன்.
என்றும் தலைவர் வழியில்
கே.வி.எஸ். சீனிவாசன்,
மாவட்ட செயலாளர்,
ரஜினி மக்கள் மன்றம்,
கிருஷ்ணகிரி.
என்று அவரது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது போன்ற செயல்களை திமுகவினர் செய்து வருவார்கள் என ரஜினி மன்றத்தினர் குற்றம்சாட்டி வருகின்றனர். எப்போதும் பொய் சொல்வதில் திமுகவினர் கைவந்த கலை எனவும் குறிப்பிட்டுள்ளனர்.