Kathir News
Begin typing your search above and press return to search.

இந்து முன்னணி நிர்வாகி கேள்வியால் பல்டி அடித்த தி.மு.க எம்.பி செந்தில்குமார் - என்ன சொன்னார் தெரியுமா?

இந்து முன்னணி நிர்வாகி கேள்வியால் பல்டி அடித்த தி.மு.க எம்.பி செந்தில்குமார் - என்ன சொன்னார் தெரியுமா?
X

ThangaveluBy : Thangavelu

  |  18 July 2022 1:26 PM GMT

இந்து கோயில் வருமானங்களை அரசு எடுத்துக்கொள்கிறது. அப்படி இருக்கும் சூழ்நிலையில் அரசு நிகழ்ச்சியில் இந்து முறைப்படி பூஜை செய்வதில் என்ன தவறு உள்ளது எனு இந்து முன்னணி கட்சி பிரமுகர் அதிரடியான கேள்வி எழுப்பியதற்கு தி.மு.க. எம்.பி., செந்தில்குமார் பின்வாங்கியுள்ளார். இது பற்றிய ஆடியோ ஒன்று சமூக வலைதளத்தில் பேசும் பொருளாக மாறியுள்ளது.

தி.மு.க., ஆட்சிக்கு வந்த பின்னர் தமிழக மக்கள் நொந்து நூலாகும் நிலை உருவாகியுள்ளது. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல் ஏமாற்றி வருவதாக எதிர்க்கட்சிகள் தினமும் கேள்வி எழுப்பி வருகிறது. அதிலும் கோயில்களை இடித்து வருவதால் பா.ஜ.க., மற்றும் இந்து முன்னணி இயக்கங்கள் தி.மு.க.,வை வறுத்தெடுத்து வருகிறது.

இந்நிலையில், தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்படி தொகுதிகுட்பட்ட தாராபுரம் ஏரியில் நடைபெற்ற அரசு விழாவில் இந்து முறைப்படி நடைபெற்ற பூஜை நிகழ்ச்சிக்கு தி.மு.க., சார்பில் எம்.எல்.ஏ., இல்லாததால் எம்.பி., செந்தில்குமார் ஒவ்வொரு அரசு நிகழ்ச்சிகளிலும் போட்டி போட்டுக்கொண்டு கலந்து கொள்கிறார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களை அழைக்காமல் புறக்கணிப்பதாக குற்றச்சாட்டுகள் உள்ளது.

அதே போன்று ஏரி தூர்வாரும் நிகழ்ச்சிக்கு முன்னதாக இந்து முறைப்படி பூஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அந்த நிகழ்ச்சிக்கு கலந்து கொள்ள சென்ற தி.மு.க., எம்.பி., செந்தில்குமார் எப்படி ஒரு திராவிட மாடல் ஆட்சியில் எப்படி இந்து முறைப்படி பூஜை செய்யலாம் என்று எதிர்ப்பு தெரிவித்தார். மேலும், கிறிஸ்தவ பாதிரியார் எங்கே முஸ்லிம் பிரதிநிதி எங்கே எனறு பொதுப்பணித்துறை அதிகாரியை கடிந்து கொண்டார். இது பற்றிய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இந்துக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்நிலையில், இந்து முன்னணியை சேர்ந்த நீலகிரி மாவட்ட செயலாளர் குட்டி என்பவர் தி.மு.க., எம்.பி.யிடம் தொலைபேசி வாயிலாக பேசினார். அப்போது அவரது கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் செந்தில்குமார் திணறினார். இனிமேல் இதுபோன்ற தவறு நடக்காது என வருத்தம் தெரிவித்தார். அப்போது இந்து முன்னணி நிர்வாகி பேசும்போது, திராவிட இயக்கத்தைச் சேர்ந்த உங்களுக்கு ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை இல்லை என்று சொல்வதில் தவறு இல்லை. ஆனால் அறநிலையத்துறை என்று ஒன்று உள்ளது. அத்துறையில் வருகின்ற வருமானம் முழுவதையும் அரசு எடுத்து சாப்பிடுகிறது. அது போன்ற கோயில்களை அரசா கட்டியது. இல்லை நமது முன்னோர்கள் கட்டிய கோயில். இந்த கோயில் வருமானத்தை அரசு எடுத்துக்கொள்கிறது. ஆனால் மசூதி மற்றும் கிறிஸ்தவ ஆலயங்களில் இருந்து வருமானம் ஏன் அரசு எடுப்பதில்லை என்ற கேள்வியை முன்வைத்தார்.

இதற்கு பதில் சொல்ல முடியாமல் தி.மு.க., எம்.பி. செந்தில்குமார் திணறினார். இது போன்ற தவறுகள் நடைபெறாது எனவும் அவர் பேசிய கருத்தில் இருந்து பின்வாங்கிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த ஆடியோ இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

Source, Image Courtesy: Asianetnews

Next Story
கதிர் தொகுப்பு
Trending News