சசிகலாவை சந்திக்க மாட்டேன்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.!
சசிகலாவை சந்திக்க மாட்டேன்: அமைச்சர் வெல்லமண்டி நடராஜன்.!
By : Kathir Webdesk
சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை தண்டனை அனுபவித்து தற்போது விடுதலை பெற்று தமிழகம் திரும்பியுள்ளார். அவரை பல அரசியல் பிரமுகர்கள் சென்று சந்திப்பார்கள் என ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்தனர். ஆனால் எதிர்பார்த்தபடி யாருமே சசிகலாவை சந்திக்கவில்லை. அதற்கு மாற்றாக அமைச்சர்கள் கூட வரவேற்பு நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவில்லை. இது அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், சசிகலாவை நான் நிச்சயமாக சந்திக்க வாய்ப்பில்லை என அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் தெரிவித்துள்ளார். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த அரசு விழாவில் அமைச்சர் வெல்லமண்டி நடராஜன் கலந்து கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித் அவர், சசிகலாவை சந்திப்பீர்களா என்ற கேள்விக்கு, ‘‘சசிகலாவை நான் நிச்சயமாக சந்திக்க வாய்ப்பில்லை’’ என்றார்.
மேலும், அமமுகவுடன் அதிமுக இணையுமா? என்ற கேள்விக்கு, ‘’அமமுகவுடன் கூட்டணி அமைக்கின்ற நிலையில் அதிமுக தலைமை இல்லை.’’ இவ்வாறு அவர் பேசினார்.