Kathir News
Begin typing your search above and press return to search.

பாம்பு குட்டி போட்டால் பாம்புக்குட்டி தானே பிறக்கும், புலிக்குட்டியா பிறக்கும்? கருணாநிதிக்கு தப்பாமல் பிறந்த ஸ்டாலின்!

பாம்பு குட்டி போட்டால் பாம்புக்குட்டி தானே பிறக்கும், புலிக்குட்டியா பிறக்கும்? கருணாநிதிக்கு தப்பாமல் பிறந்த ஸ்டாலின்!

பாம்பு குட்டி போட்டால் பாம்புக்குட்டி தானே பிறக்கும், புலிக்குட்டியா பிறக்கும்? கருணாநிதிக்கு தப்பாமல் பிறந்த ஸ்டாலின்!
X

Muruganandham MBy : Muruganandham M

  |  7 Jan 2021 9:00 AM GMT

தி.மு.க. தலைவர் ஸ்டாலினுக்கு ஏழரை சனி ஆரம்பித்து விட்டது, திருநள்ளாறு சென்று ஸ்டாலின் சாமி கும்பிடுவதே நல்லது என்று அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கூறினார்.

மேலும், இலங்கை தமிழர்கள் கொல்லப்பட்டதற்கு திமுக மற்றும் காங்கிரஸ் தான் காரணம். இதை மக்கள் மறந்துவிட வில்லை.
கட்டுக்கோப்பான தொகுதியாக விளங்கும் தொண்டாமுத்தூர் தொகுதியில் வந்து அமைச்சர் எஸ்.பி.வேலுமணி குறித்து அவதூறு பரப்புகிறார் ஸ்டாலின்.

எந்த ஊருக்கு போகிறேன் என்று தெரியாமல் எந்த ஊர்? எந்த ஊர்? என்று கேட்கிறார். ஸ்டாலினே நீங்கள் எங்கேயும் பிரச்சாரம் செய்யாதீர்கள். உங்களை பார்த்து தமிழக மக்களே சிரிக்கிறார்கள். எழுதி கொடுப்பதை படிக்கும் ஸ்டாலின் அப்படி எழுதிக் கொடுத்தது உண்மையா பொய்யா என்று கூட பார்க்க மாட்டீர்களா?

பெண்களை இழிவுபடுத்திப் பேசியவர் கருணாநிதி. பாம்பு குட்டி போட்டால் பாம்புக்குட்டி தானே பிறக்கும். புலிக்குட்டியா பிறக்கும். ஆகவேதான் கருணாநிதிக்கு பிறந்த மகன் ஸ்டாலின் கேள்வி கேட்ட பெண்ணை இழிவு படுத்தியுள்ளார். அரசு செயல்படவில்லை என்று பேசும் ஸ்டாலின் உங்கள் கட்சியை செயல்பட வைக்க சொந்த மூளை இல்லாமல் பீகாரை சேர்ந்த பிரசாந்த் கிஷோரை கொண்டு வந்தது ஏன்?

அவதூறு பரப்பி குற்றம் சொல்லியே பெயர் சம்பாதிக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டார் ஸ்டாலின். கருணாநிதி கொள்ளை அடித்த பணத்திலேயே வளர்ந்து ஒரு அரண்மனையிலேயே வளர்ந்து ராஜ வாழ்க்கை வாழும் ஸ்டாலின் தமிழ்நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பேசுகிறார்.

கழகத்தை அழிக்க நினைக்கும் திமுகவை வரும் சட்டமன்ற தேர்தலோடு துரத்தி விட வேண்டும். தமிழக மக்களையும், சிறுபான்மையினரையும் திமுக தொடர்ந்து ஏமாற்றி வருகிறது என்று கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News