ஸ்டாலினுக்கு நடந்தால் கொடுமை - Dr.தமிழிசைக்கு நடந்தால் சர்வாதிகாரமா? - நல்லா இருக்கும் உங்க நியாயம்!
ஸ்டாலினுக்கு நடந்தால் கொடுமை - Dr.தமிழிசைக்கு நடந்தால் சர்வாதிகாரமா? - நல்லா இருக்கும் உங்க நியாயம்!

நேற்று கோவை தொண்டாமுத்தூர் பகுதியில் தி.மு.க சார்பில் "கிராம சபை கூட்டம்" என பெயரிடப்பட்டு தி.மு.க-வின் பிரச்சார கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டமானது கோவிலில் நடைபெற்றதாலும் நேற்று சனிக்கிழமை ஆதலாலும் நிறைய அளவில் பெண்கள் அந்த பகுதி கோவிலுக்கு வந்தனர். அப்பொழுது கூட்டத்தில் பேசிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் முதலைமச்சர் எடப்பாடி கே.பழனிச்சாமியையும், அமைச்சர் வேலுமணியையும் விமர்சித்து பேசியுள்ளார்.
அப்பொழுது அந்த கூட்டத்தின் அருகில் வந்த பெண்மணி ஸ்டாலினை பார்த்து "ஏன் இவ்வாறு தவறுதலாக பேசுகிறீர்கள் என கேட்டார்?" உடனே தி.மு.க தலைவர் ஸ்டாலின் "நீ யாருமா?" என ஒருமையில் கேட்டது மட்டுமல்லாமல் "நீ எந்த ஊருமா?" எனவும் மிரட்டினார். அதுமட்டுமின்றி உடனே பாதுகாவலர்களை நோக்கி அந்த பெண்ணை தூக்கி வெளியில் போடுங்கள் என கூறினார். உடனே அங்கிருந்தவர்கள் அவரை பெண் என்றும் பாராமல் கையை பிடித்து தரதரவென இழுத்து சென்றனர்.
பின் அந்த கூட்டத்தில் பேசிய ஸ்டாலின் அமைச்சர் வேலுமணி தான் இந்த சம்பவத்திற்கு காரணம் என குறிப்பிட்டு, "அமைச்சர் வேலுமணி அவர்களே! மிஸ்டர் வேலுமணி அவர்களே! ஊழல் வேலுமணி அவர்களை! இத்தோடு நிறுத்தி கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்தால் நீ இல்லை உன் முதல்வர் கூட எங்கும் கூட்டம் போட முடியாது!" என அமைச்சரையும், முதல் அமைச்சரையும் ஒருமையில் மிரட்டினார்.
ஆனால் இதே தி.மு.க தலைவர் ஸ்டாலின் தான் கடந்த 2018-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 4-ஆம் தேதி தூத்துக்குடியில் விமானத்தில் பயணித்த சோபியா என்ற பெண் பா.ஜ.க தலைவர் தமிழிசை சவுந்திரராஜன் குறித்து விமர்சித்த காரணத்திற்காக மாணவி சோபியாவிற்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். அப்பொழுது மக்கள் பயணிக்கும் விமானத்தில் கோஷமிடுவதை ஆதரித்த ஸ்டாலின் தற்பொழுது மக்கள் பங்கேற்கும் கூட்டத்தில் மக்களில் ஒருவர் அதிலும் பெண் கேள்வி கேட்பதை எதிர்த்து ஒருமையில் பேசுவது எவ்வித நியாயம்? மேலும் அவரை மரியாதை குறைவாக நடத்துவது அரசியல் தலைவருக்கு அதிலும் ஆள வேண்டும் என நினைக்கும் தலைவருக்கு இதுதான் முறையா என பல அரசியல் விமர்சகர்கள் கேள்வியை முன் வைக்கின்றனர்.
ஸ்டாலினுக்கு நடந்தால் கொடுமை தமிழிசைக்கு நடந்தால் சர்வாதிகாரமா? ஒரு நியாயம் வேண்டாமாப்பா?