Kathir News
Begin typing your search above and press return to search.

'இவங்களுக்கு பயந்தா என் கிராமத்துல நான் ஒதுங்கி கிடக்க வேண்டியதுதான்' -விமர்சனங்களுக்கு அண்ணாமலை பதிலடி

'கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்' என அண்ணாமலை தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

இவங்களுக்கு பயந்தா என் கிராமத்துல நான் ஒதுங்கி கிடக்க வேண்டியதுதான் -விமர்சனங்களுக்கு அண்ணாமலை பதிலடி

Mohan RajBy : Mohan Raj

  |  31 Jan 2023 1:13 AM GMT

'கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்' என அண்ணாமலை தன்னை விமர்சிப்பவர்களுக்கு பதிலடி கொடுத்துள்ளார்.

சமீப காலமாக தமிழக பாஜகவை சுற்றி எதிர் கருத்துக்கள் மற்றும் சர்ச்சைகள் எழுந்து வருகிறது, குறிப்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையை சுற்றி ஒரு சிலர் உள்நோக்கத்துடனும், மன வெறுப்புடனும் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள். அண்ணாமலை அரசியலுக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகிறது, அண்ணாமலை அரசியலுக்கு வந்த குறுகிய காலத்திலேயே தமிழக பாஜக தலைவர் பொறுப்பை ஏற்றார்!

அதற்கு காரணம் அண்ணாமலையின் அர்ப்பணிப்பு தலைமைக்கு தெரிந்ததனால் தலைமையின் முடிவினாலேயே அண்ணாமலை தமிழக பாஜக தலைவராக அறிவிக்கப்பட்டார். இப்படிப்பட்ட ஒருவரை பாஜக தலைவராக தலைமை அறிவிக்கிறது என்றால் ஏதேனும் தெரியாமல் அனுப்புவார்களா? இல்லை தெரியாமல் தான் அனுப்ப முடியுமா? அப்படி இருக்கும்பட்சத்தில் இவ்வளவு சீக்கிரம் அண்ணாமலை மேலே வந்து விட்டார்! இவ்வளவு சீக்கிரம் தலைமை பொறுப்பை எட்டிவிட்டாரே? என சிலர் நினைத்து வந்த நிலையில் அண்ணாமலை அந்த தலைமை பொறுப்பை ஏற்றது முதல் அந்த சர்ச்சை துவங்கியது.

தற்பொழுது அந்த சர்ச்சை அதிகமாக உழன்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சமீபகாலமாக சமூக வலைதளங்களில் பாஜகவை விமர்சித்தும் பாஜக ஐ.டி.ங், பாஜக தலைவர் அண்ணாமலை ஆகியோரை விமர்சித்தும் பதிவுகள் வருவது மட்டுமின்றி youtube சேனல்களிலும் ஆங்காங்கே விவாதங்கள் நடைபெற்று வந்தன.

இதுகுறித்து தற்பொழுது பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் தற்பொழுது மனம் திறந்து உள்ளார். இது தொடர்பாக 'கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்' என தலைப்பில் அவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டுள்ளதாவது, 'பலரின் தியாகத்தாலும், பலரது அயராத உழைப்பாலும் வளர்ந்த நமது கட்சி விமர்சனங்களுக்கு அஞ்சுவதா? விமர்சனங்கள் நமது கட்சியின் வளர்ச்சிக்கான உரம். ஆக்கபூர்வமான விமர்சனங்களை ஏற்றுக் கொள்ளுங்கள் அவர்கள் அவதூறுகளை ஒதுக்கி தள்ளுங்கள்.

சமீபகாலமாக என் மீது சமூக வலைத்தளங்களில் வைக்கப்படும் விமர்சனங்களுக்கு நமது கட்சியின் சகோதர சகோதரிகளும் தன்னார்வலர்களும் மிகுந்த ஆக்ரோஷமாக எதிர்வினை ஆற்றி வருவதாக அறிகிறேன். கட்சியின் தொண்டர்களும் தன்னார்வலர்களும் தங்கள் சமூக வலைதளங்களில் எதிர்வினை ஆற்றும் பொழுது கவனமாக இருக்க வேண்டியது அவசியம், உங்களுக்கு பதில் அளிக்க தெரியாது என்பது பொருள் அல்ல சில விமர்சனங்களுக்கு காத்திருந்து பதில் அளிப்பதை காட்டிலும் கடந்து செல்வதை ஆகச் சிறந்தது. மக்கள் பணியில் நாட்டம் கொண்டு பாரதிய ஜனதா கட்சியின் வளர்ச்சிக்காக அயராது உழைத்து வரும் நீங்கள் நமது கட்சியின் முன்னாள் உறுப்பினர்களுக்கும், எதிர்க்கட்சியினருக்கும் வீண் விமர்சனங்களுக்கு அல்லது சில,பல சமூக வலைதள பரப்புரையாளர்களுக்கும் செவி சாய்க்காமல் உங்கள் தொகுதியில் நமது கட்சியின் வளர்ச்சிக்கு பங்காற்றுங்கள்.

விஷமத்தனமான கருத்துக்களை பரப்பி உங்கள் கவனத்தை சிதறடிப்பது சமூக வலைத்தள பரப்புரையாளர்களின் முழுநேர வேலையாகும், நாம் தான் கவனமாக இருக்க வேண்டும் நமது கருத்தில் ஆழமுள்ள போது அவதூறுகளுக்கு அவசியம் ஏற்படாது! என்மேல் தினம் சமூக வலைதளங்களில் அவதூறு பரப்பி வருகின்றனர். சில பத்திரிகைகள் என்னை பற்றி அவதூறு பரப்பினால் நான் அவர்கள் பிழைப்பு நடக்கும் என்ற நிலைக்கு இன்று தள்ளப்பட்டுள்ளனர், இவர்களுக்கு பயந்தால் என்னுடைய கிராமத்தில் நான் ஒதுங்கி கிடக்க வேண்டியதுதான் அதைத்தான் அவர்களும் விரும்புகிறார்கள் சிலருக்கு பதில் அளித்து உங்கள் நேரத்தை வீணடிக்காமல் கடந்து செல்ல கற்றுக் கொள்ளுங்கள்' என தனது ஆதரவாளர்கள் மற்றும் கட்சியினருக்கு அண்ணாமலை அறிக்கை விடுத்துள்ளது தமிழக அரசியல் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News