ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவுக்கு பாதிப்பு.. எச்.ராஜா பரபரப்பு பேட்டி.!
ரஜினி கட்சி தொடங்கினால் திமுகவுக்கு பாதிப்பு.. எச்.ராஜா பரபரப்பு பேட்டி.!
By : Kathir Webdesk
நடிகர் ரஜினி அடுத்த மாதம் கண்டிப்பாக கட்சி தொடங்கப்படும் என அறவிப்பு வெளியிட்டிருந்தார். மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா வருகைக்கு பின்னர்தான் ரஜினி கட்சி தொடங்குவதாக கூறியுள்ளார் என அரசியல் விமர்சகர்கள் பலர் கருத்துகளை கூறி வந்தனர்.
மேலும், ரஜினி கட்சியால் திமுகவுக்குதான் மிகப்பெரிய பாதிப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து வெளியிட்டு வருகின்றனர். தற்போது இந்த கருத்துகளை அரசியல் தலைவர்களும் முன்வைத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், மதுரையில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவிடம் இந்த விவகாரங்கள் பற்றி கேட்கப்பட்டது.
அமித்ஷா வருகைக்கும் ரஜினி கட்சி தொடங்குவதற்கும் எவ்வித தொடர்பும் இல்லை.மேலும், ரஜினிக்கு சுயமரியாதை இருக்கிறது. அவர் கட்சி தொடங்குவதாக அவரேதான் முடிவெடுத்து அறிவித்திருக்கிறார் என்றார்.
மேலும், ரஜினி ரசிகர்கள் பலரும் இதுவரைக்கும் திமுகவுக்கு வாக்களித்து வந்தனர். அவர்கள் எல்லோரும் இப்போது ரஜினிக்கே வாக்களித்தால் என்ன செய்வது என்று திமுக அச்சத்தில் உள்ளது. அதனால் ரஜினி கட்சி ஆரம்பிப்பதால் திமுகவுக்குதான் ஆபத்து உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.