முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழக பா.ஜ., தலைவர் எல்.முருகன் இன்று சந்திக்கிறார். இந்நிலையில், பரபரப்பான அரசியல் சூழலில் இன்று பிற்பகல் 1 மணி அளவில் முதலமைச்சருடன் எல்.முருகன் சந்தித்து பேசுகிறார்.
தலைமை செயலகத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜ., தலைவர் எல்.முருகன் சந்திப்பு நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.
அதிமுக, பாஜக இடையே முதலமைச்சர் வேட்பாளர், கூட்டணி தொடர்பாக பிரச்சினை இருக்கும் நிலையில் இந்த சந்திப்பு நிகழ்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் முதலமைச்சர் வேட்பாளரை பாஜக தலைமை அறிவிக்கும் என பாஜக நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்து வரும் நிலையில் கூட்டணி ஆட்சி என்ற பேச்சுக்கு இடமில்லை. அதிமுக தலைமையில்தான் கூட்டணி என அதிமுக பிரச்சார கூட்டத்தில் நேற்று அக்கட்சியின் துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி.முனுசாமி பேசியிருந்தார்.
இது பற்றி கருத்து தெரிவித்த முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் அதிமுக யாருக்கும் பயந்து பேச வேண்டிய அவசியம் இல்லை என கூறியிருந்தார்.