கோவையில் அள்ள அள்ள வந்த ரவுடிகள் - மக்கள் பயத்தில் இருக்கும் பொது ஜாலியாக செல்ஃபி எடுக்கும் முதல்வர்
ஈரோட்டில் நீதிமன்ற வளாகத்தில் கொலை நடந்ததற்கு பிறகு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியதால் அது வரையில் அமைதி காத்து வந்த திமுக அரசு
By : Mohan Raj
ஈரோட்டில் நீதிமன்ற வளாகத்தில் கொலை நடந்ததற்கு பிறகு எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்ப தொடங்கியதால் அது வரையில் அமைதி காத்து வந்த திமுக அரசு தற்போது களத்தில் இறங்கி ரவுடிகளை பிடிக்க துவங்கியதில் கோவை மாநகர் முழுவதும் அள்ள அள்ள ரவுடிகளாக வந்த விவகாரம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
கோவை மாவட்ட நீதிமன்ற வளாகத்தின் பின்புற நுழைவு வாயிலில் கோபாலபுரம் பகுதி இருக்கிறது. அங்கு வழக்கறிஞர்களின் அலுவலகங்கள், தனியார் விடுதிகள், உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த நிலையில் கடந்த 12ம் தேதி இரண்டு இளைஞர்களை, 5 பேர் கொண்ட கும்பல் ஓட ஓட விரட்டியது. அரிவாள், கத்தியால் இரு இளைஞர்களையும் சரமாரியாக தாக்கியதில், ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மற்றொரு நபரை தலையில் அரிவாளால் வெட்டிவிட்டு, கண் இமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் தப்பித்துச் சென்றது. இதன் முதல் கட்ட விசாரணையில் உயிரிழந்தவர் கீரணத்தம் பகுதியைச் சேர்ந்த கோகுல் என்பது தெரிய வந்தது.
மாவட்ட நீதிமன்றம் அருகே பட்டப்பகலில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியில் ஒருவர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் வீடியோவாக தொலைபேசி மூலம் மக்களிடையே உலாவந்தது, ஒருவன் அதிகபட்ச பாதுகாப்பாக இருக்கும் இடம் நீதிமன்றம்தான் ஆனால் அந்த நீதின்மன்ற வளாகத்திலேயே கூலிப்படையால் ஒருவர் கொலை செய்யப்பட்ட இந்த சம்பவம் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மேலும் மற்றொரு சம்பவமாக மற்றொரு வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது, கடந்த 13ம் தேதி ஆவாரம் பாளையம் அருகே இந்து முன்னணி நிர்வாகி கொலை வழக்கில் ஜாமீனில் வெளியில் வந்த சத்திய பாண்டி என்பவரும் ஓட ஓட விரட்டி அடையாளம் தெரியாத கும்பலாம் படுகொலை செய்யப்பட்டார். ஏற்கனவே கோவை நீதிமன்ற சம்பவம் மக்கள் மத்தியில் பயத்தை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவம் வேறு மக்கள் பயத்தை அதிகப்படுத்தியது.
தொடர்ச்சியாக இரு தினங்கள் கோவையின் இருவேறு பகுதிகளில் பயங்கர சம்பவங்கள் அரங்கேறியதால் கோவை மாவட்ட சட்டம் - ஒழுங்கு சீர்கெட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் விமர்சித்தனர். குறிப்பாக அதிமுக, பாஜக கட்சித் தலைவர்கள் சட்டம் - ஒழுங்கு பற்றி கடுமையாக விமர்சித்தனர், ஈரோடு கிழக்கு இடைதேர்தல் கருத்துக்கணிப்பில் கூட திமுக கூட்டணி பின்னடைவை சந்திக்க இந்த கொலை சம்பவங்களும் காரணமாக அமைந்தது.
இதன் தொடர்ச்சியாக கடந்த இரண்டு நாட்களில் மட்டும் 33 ரவுடிகள் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பல்வேறு குற்ற வழக்குகளில் சிக்கித் திரிந்த குற்றவாளிகளை கைது செய்த காவல்துறை, 33 பேரையும் சிறையில் அடைத்து நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
இரண்டு நாட்கள் தொடர் கொலை சம்பவத்திற்கு பிறகு 33 ரவுடிகள் கைது செய்யப்படுவது அதுவும் தமிழகத்தில் குறிப்பாக கோவை போன்ற அமைதியான நகரில் இரண்டே நாட்களில் இது போன்ற ரவுடிகள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டது தற்பொழுது மக்கள் மத்தியில் மேலும் பயத்தை ஏற்படுத்தியுள்ளது, கோவை போன்ற ஒரு மாநகரத்திலேயே இத்தனை ரவுடிகள் ஒரே நாளில் கைது செய்யப்படுகிறார்கள் என்றால் இன்னும் தமிழகம் முழுவதும் திமுக ஆட்சியில் எத்தனை ரவுடிகள் சுதந்திரமாக சுற்றிக் கொண்டிருப்பார்கள் என்று கேள்வியும் எழுந்துள்ளது, இப்படி தமிழகம் முழுவதும் கொலை சம்பவங்கள் தொடரும் வேளையில் முதல்வர் ஸ்டாலின் மாடன் தியேட்டர்ஸ் வளாகத்தில் முன் இன்று செல்ஃபி எடுத்துக் கொண்டிருந்தார் என்பதும் மக்களிடையே குமுறலாக எழுந்துள்ளது.