Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழகத்தில் மாற்றத்திற்கான அலை! பிரதமர் மோடி வரவேற்பில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் நம்பிக்கை!

தமிழகத்தில் மாற்றத்திற்கான அலை! பிரதமர் மோடி வரவேற்பில் பா.ஜ.க. பொதுச்செயலாளர் நம்பிக்கை!

ThangaveluBy : Thangavelu

  |  27 May 2022 11:43 AM GMT

சென்னையில் பிரதமர் மோடி உணர்ச்சி அலையில் வரவேற்ற மக்கள் பெருவெள்ளத்தில் பயணம் செய்தார். அதாவது மாற்றம் வரும்போது, அது துளியாக அமையாது, மாற்றாக அலையாக இருக்கும் என்று அதன் புகைப்படங்களை பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியுள்ளார்.

பிரதமர் மோடி நேற்று (மே 26) சென்னைக் வருகை புரிந்தார். நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு ரூ.31,500 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார். விழா தொடங்குவதற்கு முன்னர் பிரதமர் மோடி ஐதராபாத்தில் இருந்து சென்னை விமான நிலையத்திற்கு விமானம் மூலம் வருகை புரிந்தார். அங்கிருந்து ஹெலிகாப்டம் மூலம் ஐ.என்.எஸ். அடையாறு வந்திறங்கினார். அங்கிருந்து காரில் சாலை வழியாக நேரு உள் விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தார்.

அப்போது பிரதமர் பயணித்த கார் நேப்பியர் பாலம், சிவானந்தா சாலை, பெரியார் சாலை சந்திப்பு, பல்லவன் சாலை, சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே பெரியமேடு வழியாக நேரு உள்விளையாட்டு அரங்கத்தை சென்றடைந்தார்.

அப்போது சாலையின் இருபுறங்களிலும் பா.ஜ.க.வினர் மட்டுமின்றி மாற்றுக்கட்சியினரும் நின்று கைகளை அசைத்து பிரதமர் மோடிக்கு உற்சாகமான வரவேற்பு அளித்தனர். அதாவது கடற்படை தளத்தில் இருந்து நேரு உள்விளையாட்டு அரங்கம் வரையிலும் மக்கள் கடல் அலை போன்று காட்சி அளித்தனர். இதனால் பிரதமர் மோடி கார் கதவை திறந்து வெளியில் நின்றவாறு கைகளை அசைத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். அனைவருக்கும் வணக்கம் செலுத்தியவாறு சென்றார்.

இந்நிலையில், பிரதமர் மோடி தமிழக மக்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்த புகைப்படங்களை தங்களது முகநூல் பக்கங்களில் பதிவிட்டு பா.ஜ.க.வினர் கருத்துக்களை கூறி வருகின்றனர். அதே போன்று பா.ஜ.க.வின் தேசிய பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தனது ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது: எண்ணிக்கை எப்போதும் சிறப்பு வாய்ந்தது ஆகும். ஆனால் உணர்வுகள் சில நேரங்களில் அதிகமானதாகிவிடும். இன்று, நேற்று அப்படி ஒரு நாள். பிரதமர் மோடி சென்னையில் பங்கேற்கும்போது உணர்ச்சி பொங்க மக்கள் வரவேற்பு அளித்தனர். இது மாற்றம் வரும்போது அது துளியாக இருக்காது, மாற்றாக அலையாக இருக்கும். இவ்வாறு அவரது ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

Source,Image Courtesy:Twitter

Next Story
கதிர் தொகுப்பு
Trending News