எந்த ஊரில் மழலையர் பள்ளிக்கூடம் திறந்திருக்கு.? உலக மகா நடிப்புனா இதுதான் தலைவரே.!
எந்த ஊரில் மழலையர் பள்ளிக்கூடம் திறந்திருக்கு.? உலக மகா நடிப்புனா இதுதான் தலைவரே.!
By : Kathir Webdesk
கொரோனா வைரஸ் தொற்று பரவிய பின்னர் தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் இன்று வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் மூடப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த விஷயம் ஆகும்.
ஆனால் இது தெரியாமலே திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் சிறு குழந்தைகளை பள்ளி கூடத்தில் இருப்பது போன்று செட் செய்து அவர்களுக்கு உணவுப்பொருட்கள் வழங்குகிறார். இந்த போட்டோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இதற்கு சமூக வலைதளவாசிகள் தங்களது பாணியில் திமுக தலைவருக்கு பதில் அளித்து வருகின்றனர். எந்த ஊரில் மழலையர் பள்ளிக்கூடம் திறந்திருக்கு சொல்லுங்க தலைவரே என்று கிண்டலாக கருத்து பதிவிட்டுள்ளனர்.
ஒரு சிலர் போட்டோ எடுப்பது உங்கள் குடும்பத்தினர் வாடிக்கையாகவே வைத்து விட்டீர்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு முன்னர் சைக்கிள் பயணம் என்று சென்றிருந்தார். அப்போது சிறு குழந்தைகளை ஏற்கெனவே சாலையில் இறக்கிவிடப்பட்டு, பின்னர் அவர்களை எதாச்சியாக பார்ப்பது போன்று ஸ்டாலின் பார்த்தார். பின்னர் அந்த குழந்தைகளுடன் கைகுழுக்கி விட்டு சென்றார்.
இந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் அப்போதும் கிண்டலுக்கு ஆளானது. மீண்டும் அதே குழந்தைகளை அவரது மகன் உதயநிதி ஸ்டாலினும் போட்டோ எடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.