'சுதந்திர போராட்ட முன்னோடி சாவர்க்கர்' - 8 வகுப்பு பாடத்தில் தமிழக மாணவர்கள் படிக்கப்போகும் சாவர்க்கர் வீர வரலாறு
ஹிந்து மகாசபையின் முன்னாள் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சாவர்க்கர் பற்றிய தகவல்கள் தமிழக பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
By : JSK Gopi
ஹிந்து மகாசபையின் முன்னாள் தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சாவர்க்கர் பற்றிய தகவல்கள் தமிழக பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.
தமிழகத்தில் தி.மு.க ஆட்சிக்கு வந்தபின் பள்ளி மற்றும் பாடத்திட்டத்தில் பல்வேறு சீர்திருத்தங்கள் செய்யப்பட்டன. பல்வேறு வரலாற்று தகவல்களை புதுப்பித்தனர், இதன்படி பள்ளி பாட புத்தகங்களும் இந்த கல்வி ஆண்டில் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக எட்டாம் வகுப்பு சமூக அறிவியல் புத்தகத்தில் இந்து மகாசபை முன்னாள் தலைவரும், சுதந்திர போராட்ட வீரரும், ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தின் முன்னோடிமான விநாயகர் தாமோதர் சாவர்க்கர் பற்றிய குறிப்புகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.
சமூக அறிவியல் புத்தகத்தின் வரலாற்று பாடத்தின் நான்காம் அலகில் 46 ஆம் பக்கத்தில் 'மக்கள் புரட்சி' என்ற பாடத்தில் 'வேலூர் கலகம்' என்ற தலைப்பில் பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளன, அதில் ஆங்கிலேயரை எதிர்த்து 1806-ல் நடந்த வேலூர் கழகமானது 1857 இல் நடந்த முதல் இந்திய சுதந்திரப் போர் அதில் முன்னோடி வி.டி.சாவர்க்கர் என்ற வரலாற்றை குறிப்பிட்டு கூறப்பட்டுள்ளது.
வி.டி.சாவர்க்கர் முதல் இந்திய சுதந்திரப் போர் வீரர் என்றும், பெரும் புரட்சியாளர் என்றும், தேசிய சுதந்திர போராட்ட வீரர் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் சாவர்க்கர் சுதந்திர போராட்ட தியாகி கிடையாது என இடதுசாரிகளால் அவதூறு செய்யப்பட்டு வந்த நிலையில் தமிழக அரசின் பாடத்திட்டத்தில் அவரை பற்றிய தகவல் இடம் பெற்றிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.